உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய் பூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் பூபதிராஜு
பிறப்புஅஜய் நரசிம்ம நாக பூபதிராஜு
14 ஆகத்து 1985 (1985-08-14) (அகவை 40)
ஆத்ரேயபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்அஜய்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சிரிஷா (தி. 2018)

அஜய் பூபதி ராஜு (Ajay BhupathiRaju) (பிறப்பு; அஜய் நரசிம்ம நாக பூபதி ராஜு) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் இயக்குநராக அறிமுகமான ஆர்எக்ஸ் 100 என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1] இப்படம் இந்தியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2] 2019 இல் சிறந்த அறிமுக இயக்குனருக்கான (தெலுங்கு) தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதைப் பெற்றார்.[3] மகாசமுத்திரம் (2021) என்ற இவரது இரண்டாவது படத்தில் சர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்திருந்தனர்.[4][5][6]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அஜய் பூபதி ராஜுவின் தந்தை பூபதி ராமராஜு வேகேசனா ஆந்திராவின் ஆத்ரேயபுரத்தில் ஒரு விவசாயியாக இருந்தார். தனது கல்விக்குப் பிறகு, தெலுங்குத் திரையுலகில் இயக்குநராகப் பணியாற்ற ஐதராபாத்து சென்றார்.

2023 ஆம் ஆண்டில், இவரது இயக்கத்தில் "மங்கலவாரம்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.[7]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் தனது நீண்ட நாள் காதலியான சிரிஷா என்பவரை 25 ஆகஸ்ட் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'RX 100' turns 3, Kartikeya awaits collaboration with director Ajay Bhupathi again". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-12. Retrieved 2022-01-31.
  2. "RX100 Hindi remake: Ahan Shetty and Tara Sutaria's Tadap goes on floors". India Today. August 6, 2019.
  3. "Siima Awards: 2019 Winners". Archived from the original on 2021-04-22. Retrieved 2020-08-16.
  4. "Sharwanand, Siddharth and Aditi Rao Hydari's Maha Samudram gets release date". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-27. Retrieved 2022-01-31.
  5. "Siddharth & Sharwanand's Mahasamudhram: Makers of Ajay Bhupathi directorial to release the film on August 19". PINKVILLA (in ஆங்கிலம்). 2021-01-30. Archived from the original on 2022-01-31. Retrieved 2022-01-31.
  6. "Maha Samudram: Sharwanand teams up with director Ajay Bhupathi for a bilingual". India Today (in ஆங்கிலம்). 2020-09-07. Retrieved 2022-01-31.
  7. Sistu, Suhas (2023-10-21). "'Mangalavaaram' trailer: Breathtaking, Emotionally Resonant, Fiery!" (in english). Retrieved 2023-10-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "How the success of RX100 helped Ajay Bhupathi win over his fiancee's family - Times of India" (in ஆங்கிலம்). 2018-08-12. Retrieved 2022-01-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_பூபதி&oldid=4377611" இலிருந்து மீள்விக்கப்பட்டது