அச்சல்கர் கோட்டை
அச்சல்கர் கோட்டை | |
---|---|
சிரோஹி மாவட்டம், ராஜஸ்தான் | |
கோட்டையின் கொத்தளங்கள் | |
ராஜஸ்தான் | |
ஆள்கூறுகள் | 24°36′56″N 72°46′7″E / 24.61556°N 72.76861°E |
வகை | மலைக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
கட்டுப்படுத்துவது | மேவார் |
மக்கள் அனுமதி |
உண்டு |
நிலைமை | பாழடைந்த நிலை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1452 |
பயன்பாட்டுக் காலம் |
கல் |
அச்சல்கர் கோட்டை ( Achalgarh Fort ) என்பது இந்தியாவின் இராஜஸ்தானில் அபு மலைக்கு வடக்கே 11 கிலோமீட்டர் (6.8 மைல்) ) தொலைவில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். மேலும் இது ஒரு மலை வாழிடமுமாகும் . இந்த கோட்டை முதலில் பரமார வம்ச ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. பின்னர் பொ.ச. 1452 -இல் ராணா கும்பாவால் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு அச்சல்கர் என்று பெயரிடப்பட்டது. அவரது ஆட்சியின் போது கட்டப்பட்ட 32 கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.
கோட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. [1] கோட்டையின் முதல் வாயில் "அனுமன்போல்" என்று அழைக்கப்படுகிறது. இது கீழ் கோட்டையின் நுழைவாயிலாக இருந்தது. இது சாம்பல் நிறக் கற்களால் கட்டப்பட்ட இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இது உள் கோட்டையின் நுழைவாயிலாக இருந்தது.
கோட்டையிலும் அதைச் சுற்றிலும் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த சில அம்சங்கள் உள்ளன. அச்சலேசுவர் மகாதேவர் கோயில் கோட்டைக்கு வெளியே உள்ளது. அங்கு சிவனின் பாதம் வணங்கப்படுகிறது. பித்தளையாலான நந்தியும் உள்ளது. கோயிலுக்கு அருகில் ஒரு குளத்தைச் சுற்றி மூன்று கல்லாலான எருமைகள் நிற்கின்றன. கோட்டையில் சைனக் கோவில்களும் உள்ளன. இவை பொ.ச.1513-இல் கட்டப்பட்டன.
சான்றுகள்
[தொகு]- ↑ Zutshi, S (2019). "The rue of remnants". Deccan Herald.