அச்சலு (கனகபுரா)

ஆள்கூறுகள்: 12°28′33″N 77°21′47″E / 12.4757°N 77.3630°E / 12.4757; 77.3630
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சலு
சிற்றூர்
அச்சலு சிற்றூர் அனங்கிய இராமநகர மாவட்டம்
அச்சலு சிற்றூர் அனங்கிய இராமநகர மாவட்டம்
ஆள்கூறுகள்: 12°28′33″N 77°21′47″E / 12.4757°N 77.3630°E / 12.4757; 77.3630
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர் ஊரக மாவட்டம்
வட்டம்கனகபுரா
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்562121
அருகில் உள்ள நகரம்இராமநகரா
Civic agencyACCHALU Doddamane Kutumba

அச்சலு (Achalu (Kanakapura) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர். [1] இது ராமநகர மாவட்டத்தின் கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ளது.

ஊர் தோற்றம் குறித்த கதை[தொகு]

அச்சலு என்பது தொட்டமனே குடும்பத்தைச் சேர்ந்த சிற்றூராகும், இது முதல் நூற்றாண்டில் காரய்யா / காரேகவுடா மற்றும் ஜுஞ்சேகவுடா ஆகியோரால் மலைக்குப் பின்னால் உருவாக்கபட்ட சிற்றூர் ஆகும். அவர்கள் அச்சலு தொட்டமானே (அச்சலு சிற்றூரின் முதல் வீடு) என்ற பெரிய வீட்டைக் கட்டினர். ஜுஞ்சேகவுடா ஆலம்பாடியைச் (ஆலம்பாடி என்பது சாமராஜநகர் மாவட்டம், மாதேஸ்வரன் மலைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்) சேர்ந்தவர். அரசனால் ஏற்பட்ட தொல்லைகளால் ஆலம்பாடியில் இருந்து அச்சலு கிரமம் உள்ள பகுதிக்கு நடந்து வந்து குடியேறி புதிய கிராமமான அச்சலுவை அழைக்கும் அச்சலா என்று பெயர் வைத்தனர்....

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான ராமநகரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவும், வட்டத் தலைநகரான கனகபுராவிலிருந்து 18 கிலோமீட்டர்தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

இந்த கிராமத்தில் 580 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,497 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,209 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,288 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 60.43% ஆகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yahoo! maps India :". பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Achalu (Kanakapura), Bangalore Rural, Karnataka

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சலு_(கனகபுரா)&oldid=3853053" இலிருந்து மீள்விக்கப்பட்டது