உள்ளடக்கத்துக்குச் செல்

அசன் நசுரல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசன் நசுரல்லா
2019ல் அசன் நசுரல்லா
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமைச் செயலாளர்
பதவியில்
16 பிப்ரவரி1992 – 27 செப்டம்பர் 2024
Deputyநயீம் காசிம்
முன்னையவர்அப்பாஸ்-அல்-முசாவி
பின்னவர்அசீம் சபி அல்-தீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-08-31)31 ஆகத்து 1960
பௌர்ஜ் ஹம்மூத், லெபனான்
இறப்பு27 செப்டம்பர் 2024(2024-09-27) (அகவை 64)
தகியா,.பெய்ரூத் புறநகரம், லெபனான்
முறை of deathஇசுரேலிய வான் வழி தாக்குதல் மூலம் கொல்லப்படல்
அரசியல் கட்சிஹிஸ்புல்லா (1982–2024)
பிற அரசியல்
தொடர்புகள்
அமல் இயக்கம் (1978–1982)
துணைவர்பாத்திமா யாசின்
பிள்ளைகள்5
கையெழுத்து

அசன் நசுரல்லா (Hassan Nasrallah, 31 ஆகத்து 1960 - 27 செப்டம்பர் 2024), லெபனான் நாட்டு சியா இசுலாமிய மத குருவும், லெபனான் அரசியல் பிரிவான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைமைச் செயலாளரும் ஆவார். இவர் 27 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டு வீச்சால், பெய்ரூத் புறநகர் பகுதியான தகியாவில் உள்ள ஹிஸ்புல்லா தலைமைச் செயலகத்தில் வைத்து கொல்லப்பட்டார். 28 செப்டம்பர் 2024 ஹிஸ்புல்லா தலைமைக்கு அசீம் சபி அல்-தீன் தேர்வு செய்யப்பட்டார்.

இயக்கம்

[தொகு]

அசன் நசுரல்லா 1960ஆம் ஆண்டில் பெய்ரூத்தின் கிழக்கு புறநகரான போர்ச் அமீதில் அப்துல் கரீமுக்கு மகனாக பிறந்தவர். காய்கறி வியாபாரம் செய்த அப்துல் கரீமுக்கு ஒன்பது குழந்தைகள் அதில் நசுரல்லா மூத்தவர்[1]. டயர் நகரத்தில் கல்வி முடித்தவர். லெபனான் உள் நாட்டு போரில் இருந்த 1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சியா குடிப்படையான அமல் இயக்கத்தில் இணைந்தார். சிறிது காலத்திலேயே ஈராக்கிய நகரான நஞ்சாபில் சியா மெய்யியல் கல்லூரியில் படிக்க சென்றார் [1] இசுரேல் லெபானை ஆக்கிரமித்த சிறிது காலத்தில் அமல் இயக்கம் 1982இல் பிளவுபடும் முன் அதில் இணைந்தார். பிளவுபட்ட அமல் இயக்கம் இசுலாமிய அமல் என அறியப்பட்டது. இது பெக்கா பள்ளத்தாக்கில் இருந்த ஈரானிய புரட்சிப்படையிடம் இருந்து கணிசமான ஆயுதங்களையும் ஆள் ஆதரைவையும் பெற்றது. சியா குடிப்படைகளில் இதுவே சக்திமிக்கதாக இருந்தது. இதுவே பின்பு கெசபுல்லா என்று அழைக்கப்பட்டது. கெசபுல்லாவில் போர்வீரனாக இருந்த பின் பால்பெக் நகரத்தின் கட்டளைத் தளபதியாக உயர்ந்தார். பின்பு பெக்கா பகுதி முழுமைக்கும் அதன் பின் பெய்ரூத்துக்கும் கட்டளைத் தளபதி ஆனார். [1]

ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் அப்பாஸ்-அல்-முசாவி 1992ல் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட போது[2], அசன் நசுரல்லா அதன் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.

மரணம்

[தொகு]

2023 இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தொடர்ச்சியாக, செப்டம்பர் 2024ல் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையே போர் துவங்கியது. இப்போரின் போது, ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் அசன் நசுரல்லா 27 செப்டம்பர் 2024 அன்று இஸ்ரேலிய வான் படைகளின் குண்டு வீச்சால் கொல்லப்பட்டார்.[3] தரைக்கு கீழே 60 அடி ஆழ சுரங்கத்தில் இருந்த இவரை சுரங்க தகர்ப்பு குண்டை வீசி இசுரேல் கொன்றுள்ளது. இத்தாக்குதலில் 85 சுரங்க தகர்ப்பு குண்டுகளுடன் 80 டன் வெடிகள் பயன்படுத்தப்பட்டன. இசுரேல் பயன்படுத்திய சுரங்க தகர்ப்பு குண்டு 95 அடி ஆழத்தில் பைஞ்சுதை (கான்கிரிட்) சுவர் அமைத்து இருந்தாலும் தகர்க்கக்கூடியது[4] அமெரிக்கா இவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட 900 கிலோ (2000 பவுண்டு) எடையுடைய பிஎல்யு-109 குண்டை கொடுத்ததாக கருதப்படுகிறது.[5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Who was Hezbollah leader Hassan Nasrallah?
  2. "Hezbollah". Council on Foreign Relations. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
  3. Israeli strikes kill Hezbollah chief Nasrallah
  4. How Israel Used Bunker-Buster Bombs To Kill Hezbollah Leader
  5. Israel likely used US-made bombs in Nasrallah assassination: Report
  6. What are bunker busters? US-made bomb used by Israel to kill Hezbollah leader Hassan Nasrallah
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_நசுரல்லா&oldid=4124690" இலிருந்து மீள்விக்கப்பட்டது