உள்ளடக்கத்துக்குச் செல்

நயீம் காசிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நயீம் காசிம்
2014-இல் நயீம் காசீம்
ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 அக்டோபர் 2024
முன்னையவர்அசன் நசுரல்லா
ஹிஸ்புல்லாவின் துணை தலைமைப் பொதுச்செயலாளர்
பதவியில்
1991 – 29 அக்டோபர் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1953 (அகவை 72–73)
கபார் பிலா, நபாதி ஆளுநரகம், தெற்கு லெபனான்
அரசியல் கட்சிஹிஸ்புல்லா
துணைவர்அடையாளம் தெரியவில்லை
பிள்ளைகள்6
கல்விலெபனான் பல்கலைக்கழகம்
சமயம்சியா இசுலாம்

நயீம் காசிம் (Naim Qassem) (பிறப்பு:1953), லெபனான் நாட்டின் சியா இசுலாம் மத குருவும்; ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலாளராக 1991 முதல் 28 அக்டோபர் 2024 முடிய பணியாற்றினார்.[1][2][3]ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச் செயலாளராக பணியாற்றிய அசன் நசுரல்லா இஸ்ரேலின் வான்படைத் தாக்குதலில் 27 செப்டம்பர் 2024 அன்று மறைந்த பிறகு, சூராக் குழு 29 அக்டோபர் 2024 அன்று நயீம் காசீமை ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொதுச்செயலளராக தேர்வு செய்தது.[4][5][6][7]

இளமை & கல்வி

[தொகு]

தெற்கு லெபனான் பகுதியில் உள்ள நபாத்தியா ஆளுநரகத்தில் அமைந்த கபார் பிலா எனும் ஊரில் 1953ல் சியா இசுலாம் குடும்பத்தில் நயீம் காசிம் பிறந்தார்.[8][9] இவர் இசுலாமிய மார்க்கக் கல்வியையும்; வேதியியலில் இளநிலை பட்ட படிப்பை லெபனான் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[8]

தொழில்

[தொகு]

1970களில் லெபனான் இசுலாமிய மாணவர் அமைப்பை நிறுவியர்களில் நயீம் காசிமும் ஒருவராவர்.[9] மூசா அல்-சதர் நிறுவிய அமல் இயக்கத்தில் சேர்ந்தார்.[2][8] 1974 முதல் 1988 முடிய இசுலாமிய கல்வி சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தார்.[9] ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவுவதில் காசிம் பங்கு வகித்தார். காசிம் 1991-இல் ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைமைப் பொதுச்செயலர் ஆனார்.[8][10]

படைப்புகள்

[தொகு]

நயீம் காசிம் எழுதிய நூல்கள்:

  • Hezbollah: The Story from Within.[11]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Andrew Coombes in Beirut (2007). "Interview: Naim Qassem". Al Jazeera. http://english.aljazeera.net/news/middleeast/2007/11/2008525183720231945.html.
  2. 1 2 "Who is Sheikh Naim Qassem, Hezbollah's deputy leader who spoke on Monday?". Reuters.
  3. ↑ "Who is Sheikh Naim Qassem, Hezbollahs deputy leader who spoke on Monday?". LBCIV7 (in ஆங்கிலம்). Retrieved 2024-09-30.
  4. ↑ Naim Qassem elected new Hezbollah chief, to succeed Hassan Nasrallah
  5. ↑ Hezbollah names deputy head Naim Qassem to succeed slain leader
  6. ↑ Hezbollah finally appoints a new chief Naim Qassem
  7. ↑ Hezbollah names Naim Qassem as new leader, Israel says he won't last long
  8. 1 2 3 4 "Sayyed Nasrallah re-elected for another term". The Weekly Middle East Reporter. 5 December 2009. http://www.thefreelibrary.com/Sayyed+Nasrallah+re-elected+for+another+term.-a0214528324.
  9. 1 2 3 Dominique Avon; Anaïs-Trissa Khatchadourian; Jane Marie Todd (10 September 2012). Hezbollah: A History of the "Party of God". Harvard University Press. p. 210. ISBN 978-0-674-06752-3. Retrieved 14 April 2013 – via books.google.com.
  10. ↑ "Hizbullah Renews Nasrallah as Head of Shiite Party; Forms A New Shura Council". The Daily Middle East Reporter. 20 November 2009. http://www.thefreelibrary.com/Lebanon-Hizbullah.-a0213406603.
  11. ↑ Glass, Charles (17 August 2006). "Learning from Its Mistakes: Charles Glass on Hizbullah". London Review of Books. http://www.charlesglass.net/archives/2006/08/learning_from_i_1.html. பார்த்த நாள்: 9 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயீம்_காசிம்&oldid=4641385" இலிருந்து மீள்விக்கப்பட்டது