அசன்தேவி
அசன்தேவி அல்லது அசன்பீபி (Asanbibi, வங்காள மொழி: আসানবিবি) என்பது தென் மேற்கு வங்காளத்திலும் தெற்கு வங்காளதேசத்திலும் வணங்கப்படும், நாட்டுப்புற தெய்வமாகும். [1]
இவருடன் இணைந்து, ஒலாதேவி (காலராவிற்கான தெய்வம்), அஸ்கைபிபி , சந்த்பிபி , பஹதாபிபி , ஜெதுன்பிபி மற்றும் ஜோலைபிபி ஆகிய ஏழு பேருமே வணங்கப்படுகிறார்கள். எழுவரும் இணைந்து சத்பீபி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஏழு நாட்டுப்புற தெய்வங்களும் கிராமப்புறங்களில் அதிக அளவில் வணங்கப்பட்டு வந்தது பிற்பாடு இந்த ஏழு தெய்வங்களும் லோகாயத ஆசாரத்தின் படி ஏழு நோய்களுக்கான தெய்வங்களாக மாற்றப்பட்டு வழிபட்டு வருகிறது
சிலர், இந்து சமயத்தில் கூறப்படும் சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் எனப்படும் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோரே இந்த சத்பிபி எனப்படும் ஏழு தெய்வங்கள் என்று நம்புகிறார்கள், ஆனால் சப்தமாத்ரிகர்களுக்கும் சத்பிபி இடையே கிட்டத்தட்ட எந்த ஒற்றுமையும் இல்லை. இப்படியான தெய்வங்களின் கூட்டு வழிபாடு வரலாற்றுக்கு முந்தைய இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகர்ப்புற மையமான மொகெஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுடுமண் பாண்ட முத்திரையால் அறியலாம், இது ஏழு பெண்கள் ஒன்றாக நிற்கும் உருவத்தை சித்தரிக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அசான் பீபி பூஜை". பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
- ↑ Basu, Gopendrakrishna (2008) [1966]. Banglar Laukik Debata (in Bengali), Kolkata: Dey's Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7612-296-3, pp.187-91