அக்வாபோனிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு சிறிய அளவு அக்வாபோனிக்ஸ் அமைப்பு. இது மீன்வளர்ப்பு, நீர்வளவியல் வேளாண்மை ஆகியவற்றின் சேர்க்கையாகும்.

அக்வாபோனிக்ஸ் (Aquaponics) (/ˈækwəˈpɒnɪks/) என்பது வழக்கமான மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வடிவமாகும். இதில் நீர்வாழ் விலங்குகளான ( மீன், நத்தை, நண்டு, இறால் போன்றவை ) வளர்ப்பதுடன் நீரியல் வளர்ப்பில் பயிர்களை வளர்த்தல் ஆகிய ஒன்றிய வாழ்வு என்ற சூழலைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக மீனின் எஞ்சிய உணவும் மீனின் கழிவுகளிலிருந்து உண்டாகும் அளவுக்கு அதிகமான புரத சத்துக்களால் நீர் நஞ்சாவது என்பது மீன் வளர்ப்பின் முக்கியப் பிரச்சினை. அதேபோல நீரியல் வளர்ப்பின் பிரச்சினை என்பது வேளாவேளைக்கு உரமிட வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு முறையையும் இணைப்பதன் மூலம், மீனின் கழிவு செடிக்கு உரமாகிறது, சுத்தமான நீரும் மீனுக்குக் கிடைக்கிறது. நீரில் உள்ள நுண்ணுயிரிகள், மீனின் கழிவை அம்மோனியாவாகவும், பின் அந்த அம்மோனியாவை நைட்ரேட்டாகவும் மாற்றுகின்றன. நைட்ரேட்ஸ் என்பது நைட்ரஜனின் வடிவம் ஆகும். அதைத் தாவரங்கள் ஊட்டமாக பெற்று, தமது வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறாக அக்வாபோனிக்ஸ் முறையில் ஒன்றின் குறை மற்றதற்கு நன்மையாக மாறுகிறது.

அமைப்பு[தொகு]

அக்வாபோனிக்ஸ் அமைப்பில், நீர்வாழ் விலங்குகளான மீன் போன்றவை வளரும் தொட்டியும், நீரியல் வளர்ப்பு செடிகள் வளரும் தட்டுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும். இதில் நீரானது இடைவேளியின்றிச் சுழற்சி முறையில் மீன் தொட்டியின் மேல் இருக்கும் செடி வளரும் தட்டுக்குச் சென்று, பின் அங்கு இயற்கை முறையில் சுத்தகரிக்கப்பட்டுப் பின் மீண்டும் மீன் தொட்டிக்கு வரும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அக்வாபோனிக்ஸ் முறையிலான நீரியல் வளர்ப்பில் செடி வளர்க்க மண்ணில் செடி வளர்ப்பதற்குத் தேவைப்படும் நீரில் பத்தில் ஒரு பங்கே போதுமானது. மேலும் களையெடுப்பு, உரமிடல் ஆகிய வேலைகளும் கிடையாது. இது தவிரச் சுற்றுச்சுசூழல் மாசுபடுவதையும் இது வெகுவாகத் தடுக்கின்றது. எல்லாவிதமான தாவரங்களையும் வளர்க்க முடிந்தாலும், இந்த முறையில் முட்டைக்கோஸ், கீரை, தக்காளி, மணி மிளகு, ஓக்ரா போன்றவை வேகமாக வளரும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முகமது ஹுசைன் (2017 சூலை 15). "வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்!". கட்டுரை. தி இந்து. 15 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்வாபோனிக்ஸ்&oldid=3081445" இருந்து மீள்விக்கப்பட்டது