அக்பர் ஹைதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாமின் ஆளுநராக இருந்த முகம்மது சலே அக்பர் ஹைதாரியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.
அக்பர் ஹைதாரி
ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம அமைச்சர்கள் பட்டியல்
பதவியில்
18 மார்ச்சு 1937 – செப்டம்பர் 1941
முன்னையவர்கிஷான் பிரசாத்
பின்னவர்முஹம்மது அஹமது சையத் கான் சத்தாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1869-11-08)8 நவம்பர் 1869
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புநவம்பர் 1941 (அகவை 71–72)
துணைவர்
பிள்ளைகள்முகம்மது சலேத் அக்பர் ஐதாரி
வேலைஅரசியல்வாதி

சர் முஹம்மது அக்பர் நாசர் அலி ஹைதாரி, (Sir Muhammad Akbar Nazar Ali Hydari) சதர் உல்-மஹாம், கிபி (1869-1941)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமராக 18 மார்ச் 1937 முதல் செப்டம்பர் 1941 வரை பணியாற்றினார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஹைதாரி 1869ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முஸ்லிம்களின் சுலைமானி போஹ்ரா சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை சேத் நாசர் அலி ஹைடாரி, பம்பாயின் தொழிலதிபர் ஆவார்.[3]

தொழில்[தொகு]

ஹைதாரி ஐதராபாத் மாநிலத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் சேவையில் பணியாற்றினார். இங்கு இவர் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் ஆனார். அஜந்தா குகைகளின் மறுசீரமைப்பிற்கு இவர் முக்கியக் காரணமாக இருந்தார்.[4] நவம்பர் 1930 முதல் ஜனவரி 1931 வரை நடந்த முதல் வட்ட மேசை மாநாட்டிலும் ஐதராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சனவரி 1936-ல், இவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5] இவர் 1941-ல் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

இவரது மனைவி அமினா ஐதாரி தியாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் பெயர் முகமது சலே அக்பர் ஐதாரி.[6] இவரது பெயர்த்தி ஹபீபா ஹைடாரி கோவா ஓவியர் மரியோ மிராண்டாவை மணந்தார்.

கௌரவங்கள்[தொகு]

1928ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் ஐதாரி பிரித்தா அரசாங்கத்தின் ஆண்டகைப் பட்டம் பெற்றார்.[4] வைசிராய், இர்வின் பிரபு 17 திசம்பர் 1929 அன்று ஐதராபாத்தில் இவருக்கு ஆண்டகைப் பட்டத்தினை முறையாக வழங்கினார்.[7]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mohammed Akbar Nazar Ali Hydari (1869 - c.1941)". பார்க்கப்பட்ட நாள் 2013-07-05.
  2. Hyderabad, Princely States of India, WorldStatesmen.org
  3. "Golconde". {{cite web}}: Missing or empty |url= (help)
  4. 4.0 4.1 Gunther, John. Inside Asia - 1942 War Edition. READ BOOKS, 2007, pp. 471-472
  5. Edinburgh Gazette, 7 January 1936[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Sulaymani Bohra: South Asia, accessed July 5, 2010
  7. Edinburgh Gazette, 11 February 1930[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_ஹைதாரி&oldid=3816166" இலிருந்து மீள்விக்கப்பட்டது