முஹம்மது அஹமது சையத் கான் சத்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முஹம்மது அஹமது சையத் கான் சத்தாரி (Muhammad Ahmad Said Khan Chhatari) லெப்டினன்ட் கலோனல் சயீத் உல்-முல்க் நவாப் சர் முஹம்மது அஹமது சையத் கான், [GBE - KCSI - KCIE] பொதுவாக சத்தாரியின் நவாப் என்று குறிப்பிடப்படுகிறார். (பிறப்பு 12 டிசம்பர் - 1888 இறப்பு 1982) ஐக்கிய மாகாணங்களின் கவர்னர், ஐக்கிய மாகாணங்களின் முதல்வர், ஹைதராபாத் நிஜாமின் நிர்வாகக் குழுவின் தலைவர் (அதாவது ஹைதராபாத் பிரதமர்) மற்றும் இந்தியாவின் தலைமை சாரணராகவும் இருந்தார்.[1] [2][3][4][5][6]

பிறப்பு[தொகு]

அவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள சத்தாரியில் 12 டிசம்பர் 1888 அன்று சத்தாரியின் நவாப் முகமது அப்துல் அலி கானின் லால்கானி குடும்பத்தில் பிறந்தார்.

கல்வி[தொகு]

நவாப் சத்தாரி தனது கல்வியை அலிகரில் உள்ள முஹம்மதன் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியில் பயின்றார்.

திருமணம்[தொகு]

நவாப் சத்தாரி தலிப் நகரின் நவாப்பும் தனது சொந்த மாமாவுமான நவாப் அப்துல் சமத் கான் பகதூரின் மகளை மணந்தார். அவருக்கு ரஹத் சயீத் கான் மற்றும் ஃபர்ஹத் சயீத் கான் என இரு மகன்கள் இருந்தனர். இளைய மகன், ஃபர்ஹத் சயீத் கான், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தனது ஆர்வத்திற்காக குறிப்பிடத்தக்கவர் மேலும் அவர் கொல்கத்தாவில் உள்ள சங்கீத் ரிசர்ச் அகாடமியில் இசை பயின்றார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு குடும்பம் பாகிஸ்தானுக்குச் சென்றது, மூத்த மகன் (ரஹத் சயீத் சட்டாரி) பாகிஸ்தான் தேசிய செனட்டின் செனட்டரானார்.

வட்ட மேசை மாநாடு[தொகு]

நவம்பர் 12, 1930 அன்று லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் ஆகா கான் தலைமையில் நவாப் சத்தாரி கலந்து கொண்டார். இவருடன், முஹம்மது அலி ஜின்னா, சர் முகமது ஷபி, மௌலானா முஹம்மது அலி, டாக்டர் ஷஃபத் அலி, சர் முஹம்மது ஜஃபருல்லா கான் மற்றும் ஃபஸ்லுல் ஹக் உட்பட்ட முஸ்லீம் தூதுக்குழுவினர் கலந்து கொண்டனர்.[7][8]

முதலமைச்சர்[தொகு]

நவாப் சத்தாரி 17 மே 1923 முதல் 11 ஜனவரி 1926 வரை ஐக்கிய மாகாணங்களின் அமைச்சரவையில் பதவி வகித்தார் பின்னர் 1931 இல் அவர் விவசாய அமைச்சராகவும் பதவி வகித்தார். தொடர்ந்து [[ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்|ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தின் முதலமைச்சராக 3 ஏப்ரல் 1937 முதல் 16 சூலை 1937 வரை பதவி வகித்தார்.[9][10]

ஹைதராபாத்தின் பிரதம மந்திரி[தொகு]

நவாப் சத்தாரி ஜூலை 1941 முதல் ஆகஸ்ட் 1941 வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிரதம மந்திரி பதவியை ஏற்க அவர் தனது தேசிய பாதுகாப்பு குழு பதவியை ராஜினாமா செய்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 11 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. Who's who in India, Burma & Ceylon. Who's who Publishers India. 1936. பக். 307. https://books.google.com/books?id=uLfl-WcHGRYC&q=Nawab+Talibnagar&dq=Nawab+Talibnagar. 
  3. "National Portrait Gallery - Person - Nawab Sir Muhammad Ahmad Said Khan Chhatari". Npg.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.
  4. Kashmir Information website பரணிடப்பட்டது 5 செப்தெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  5. Constructing Post-Colonial India: National Character and the Doon School By Sanjay Srivastava by Sanjay Srivastava - 2005
  6. "Chief Minister". Uplegisassembly.gov.in. Archived from the original on 12 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2014.
  7. "Round Table Conferences". Story of Pakistan. June 2003. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.
  8. Muslim Delegation at 1930 Round Table Conference
  9. United Provinces Assembly website பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்
  10. Journey to Forever.org
  11. Tribune India website