அக்நா மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்நா மலைகள்
Akna montes PIA00250.jpg
அக்நா மலையின் வடக்குப்பகுதியின் மெகல்லன் ரேடார் படம். வட்டமாகத் தோன்றுவது வாண்டா கிண்ணக்குழி]] ஆகும்.
வகைமலைகள்
ஆயம்68°54′N 318°12′E / 68.9°N 318.2°E / 68.9; 318.2ஆள்கூறுகள்: 68°54′N 318°12′E / 68.9°N 318.2°E / 68.9; 318.2
விட்டம்830 கி.மீ
Eponymஅக்நா

அக்நா மலைகள் (Akna Montes) என்பவை வெள்ளியின் மையத்தில் 68.9°வ, 318.2°கி ஆள்கூறுகளில் உள்ள 830 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு மலைத் தொடராகும்.

வடக்குத் தெற்காக ஏற்ற முகத்துடன் நீளும் முகட்டுப் பட்டையால் லட்சுமி பிலானம் என்ற உயரமான மேட்டுநிலப்பகுதியின் மேற்கு எல்லை உருவாகியுள்ளது. எரிமலை வெடிப்பின் விளைவாக லட்சுமி மேட்டுநிலப்பகுதி உருவாகி அதனைச் சுற்றிலும் எல்லா பக்கங்களிலும் மலைத் தொடர் சங்கிலிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. இம்மலைகளுக்கு அருகில் உள்ள சமவெளிகள் உருவம் சிதைந்து காணப்படுகின்றன. சமவெளிகள் தோன்றியதற்குப் பின்னரும் கூட சில மலைப்பகுதிகள் உருவாகியிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்நா_மலை&oldid=1915680" இருந்து மீள்விக்கப்பட்டது