அகிர் போரிச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகிர் போரிச்சா (Ahir Boricha) என்பவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் காணப்படும் அகிர் சாதியின் ஒரு பிரிவினர் ஆவர்.[1]

தோற்றம்[தொகு]

போரிச்சாக்கள் கச்சு போரிச்சா பகுதியிலிருந்து தங்கள் பெயரைப் பெற்றனர். இப்பகுதி இவர்களின் தாயகமாக இருந்தது. இவர்கள் வறட்சியின் காரணமாக ஜாம்நகர் மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தனர்.[2] மரபுகளின்படி, போரிச்சா என்ற வார்த்தைக்கு மதிப்புள்ளவர்கள் என்று பொருள்.[2] ஜாம்நகர் மாவட்டம் ஜோடியா வட்டம், கச்சு மாவட்டம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள மோர்வி மற்றும் ஜுனாகத் மாவட்டத்திலும் தற்போது இச்சமூகத்தினர் காணப்படுகின்றனர். இந்த குழுவினர் குசராத்தில் காணப்படும் அகிர் சமூகத்தின் நான்கு துணைக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சமூகம் இன்றும் குசராத்தி மற்றும் குச்சி மொழி பேசுகிறது.[1]

போரிச்சாக்கள் இந்துக்கள் ஆவர். இவர்கள் இராமர், சிவன், பிள்ளையார், கிருட்டிணன் மற்றும் லட்சுமி போன்ற இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 People of India Gujarat Volume XXII Part One edited by R.B Lal, S.V Padmanabham & A Mohideen page 42 to 45 Popular Prakashan
  2. 2.0 2.1 Rajendra Behari Lal; Kumar Suresh Singh; Anthropological Survey of India (2003). Gujarat, Part 1. Popular Prakashan. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179911044. https://books.google.com/books?id=4Cy_-FXW9BQC&dq=Ahir+Boricha&pg=PA42. 

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மெஹுல் பொரிச்சா
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிர்_போரிச்சா&oldid=3500050" இலிருந்து மீள்விக்கப்பட்டது