அகலிலை காரக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகலிலை காரக்கீரை
Escarole endive
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
C. endivia
இருசொற் பெயரீடு
Cichorium endivia
L.
வேறு பெயர்கள் [1]
  • சிக்கோரியம் காசுனியா - Cichorium casnia Wall.
  • சிக்கோரியம் காசுனியா - Cichorium casnia C.B.Clarke
    • சிக்கோரியம் கிரிசுப்பம் - Cichorium crispum Mill. nom. illeg.
  • சிக்கோரியம் எசுக்குலென்டம் - Cichorium esculentum Salisb.

அகலிலைக் காரக்கீரை (Cichorium endivia) என்பது அசுட்டெரேசியே குடும்பத்தின் சிக்கோரியம் பேரினத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இதன் எண்டிவே, எசுக்கரோல் ஆகிய இரண்டு ஒத்த காரக்கீரைகள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன.[2] சி. எண்டிவியா , சி. இன்டிபசு ஆகிய இரண்டு இனங்களுக்கு இடையில் வகைப்படுத்துதலில் குழப்ப/மயக்க நிலை நிலவுகிறது.[3][4]

அகலிலை எண்டிவா பயிரிடும்வகை அகலிலை காரக்கீரை
கூரிலை எண்டிவா பயிரிடும்வகை சிக்கரி

விவரிப்பு[தொகு]

சுருண்ட கூரிலைக் காரகீரையாகிய எண்டிவேவும் அகலிலை காரக்கீரையாகிய எசுக்கரோலும் சிக்கோரியம் எனும் தாவரப் பேரினத்தின் உறுப்பினங்களாகும். எண்டிவே தலையின் வெளிப்புற இலைகள் பசுமையானவை; கார்ப்புச் சுசை கொண்டவை. எண்டிவே தலையின் உட்புற இலைகள் வெளிர்பசுமை முதல் குழைவு வெண்ணிறமுள்ளவை; இளங்காரச் சுவையும் மென் நறுமணமும் கொண்டவை. இக்கீரை மற்ற காய்குவைகளுக்கு கார்ப்புச் சுவைஅயை ஊட்டுகின்றன.

எசுக்கரோல் அல்லது அகலிலைக் காரக்கீரை அகன்ற, வெளிர்பசுமைஈலைகளுடன் அமைகிறது. இது மற்ற பயிரிடும்வகைகளைவிட குறைவான காரம் கொண்டிருக்கும். இது பவாரியக் காரக்கீரை, பதாவியக் காரக்கீரை, குருமோலோ, சுகரோலா என அகலிலைக் காரக் கீரைக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. இதைக் கீரையாகவும் காய்க்குவைகளில் சேர்த்தும் நறுஞ்சுவைநீர்களில் கலந்தும் உண்ணலாம்.

பயிரிடல்[தொகு]

சுருண்ட கூரிலைக் காரக்கீரை இலைக்கோசைப் போலவே பயிரிடப்படுகிறது. இளவேனில் முன்பட்டத்தில் விதை தோட்டத்தில் விதைக்கப்படுகிறது. மாறாக, விதைகளை பசுமைக்குடிலில் விதைத்து இளநாற்றுகளைப் பிறகு தோட்டத்துக்கு மாற்றி நடலாம். கீரை அறுபது நாட்களில் போதிய வளர்ச்சிக்குப் பின் 10 அங்குலம் நீளம் அடைந்ததும் அறுவடை செய்யப்படுகிறது. விதை முழுவதும் பின்பனி முடிந்த் பிறகே விதைக்கப்படல் வேண்டும். வேர்கள் முன்பனி தொடங்கும் முன் அறுவடை செய்யப்படுகின்றன. கீரையை முழுதாக நீக்கிவிட்டு வயலில் கொட்டி வைக்கப்படும். பனியில் நன்கு நனைந்ததும் அவை நேராக ஈரப்பதக் காற்றில் நட்டு 64 செ வெப்பநிலையைச் சீராக வைத்து புதுத்தலை வளர விடப்படும்.

தேர்ந்தெடுத்தல்[தொகு]

கூரிலைக் காரக்கீரையின் தலைகள் பழுப்பு வீறலோ புள்ளியோ சுடர்பசுமையுடன் தூய்மையாக மொறுமொறுவென அமையவேண்டும். முதிர்கீரையை விட மென்மையான இளங்கீரையே தெரிவு செய்யப்படுகிறது.இக்கீரையை நெகிழிப் பைகளில் இட்டு குளிர்கலனில் பத்து நாட்களுக்கு வைத்திருக்கலாம்.

ஊட்டச்சத்துகள்[தொகு]

பச்சை அகலிலை காரக்கீரையின் ஊட்டச்சத்துகளாகப் பின்வருவன அமைகின்றன. இதன் கலோரி மதிப்பு 71 கி.யூ ஆகும். இதில் புரதம் 1.25 கிராம் ஆகும். இதில் கொழுப்பு 0.2 கிராம் ஆகும். இதில் 3.35 கி மாவுப்பொருள் உள்ளது. இதில் உள்ள நார்ப்பொருள் 3.1 கி ஆகும். இதில் 55மிகி கால்சியம் உள்ளது. இதில் 0.83 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதில் மகனீசியம் 15 மிகி அளவுக்கு அமைகிறது. பாசுவரம் இதில் 28 மிகி அளவுக்கு உள்ளது. இதில் பொட்டாசியம் 314 மிகி அளவுக்கு உள்ளது. இதில் நாகம் 0.79 மிகி அளவுக்கு அமைகிறது. இதில் மாங்கனீசு 0.48 மிகி அளவுக்கு உள்ளது. இதில் சி வகை உயிர்ச்சத்து 6.5 மிகி அளவுக்கு உள்ளது. இதில் தயாமின் 0.08 மிகி அளவுக்கு உள்ளது. இதில் இரிபோ ஃபிளேவின்0.075 மிகி அளவுக்கு அமைகிறது. இதில் நியாசின் 0.4 மிகி அளவு உள்ளது. இதில் பான்டோதீனிக் 0.9 மிகி அளவு உள்ளது. இதில் ஃபோலேட் 142 ug அளவுக்கு அமைகிறது. இதில் ஏ உயிர்ச்சத்து 108 ug அளவுக்கு உள்ளது. இதில் பீட்டா கரோட்டீன் 1300 ug அளவு உள்ளது. இதில் ஈ உயிர்ச்சத்து 0.44 மிகி அளவு உள்ளது. இதில் கே உயிர்ச்சத்து 231 ug அளவு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cichorium endivia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. The Plant List, Cichorium endivia L.
  2. USDA GRIN Taxonomy, பார்க்கப்பட்ட நாள் 17 May 2016
  3. "Chicory and Endive". Innvista. 2013-07-31. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  4. "Endive | Archives | Aggie Horticulture". Plantanswers.tamu.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலிலை_காரக்கீரை&oldid=3926950" இலிருந்து மீள்விக்கப்பட்டது