அகலிச்னிசு டேக்னிகலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Life
அகலிச்னிசு டேக்னிகலர்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
இனம்:
A. dacnicolor
இருசொற் பெயரீடு
Agalychnis dacnicolor
(Cope, 1864)
வேறு பெயர்கள்
  • Pachymedusa dacnicolor (Cope, 1864)

அகலிச்னிசு டேக்னிகலர் (Agalychnis dacnicolor) என்பது மெக்சிகன் இலை தவளை என்பது தவளை குடும்பமான பைலோமெடுசிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும். இது மெக்சிக்கோவில் மட்டுமே காணக்கூடியது.

முதிர்வடைந்த தவளை சுமார் 100 மி.மீ. வரை வளரும். பசுமை நிற முதுகுபுறம் வெள்ளை புள்ளிகள் சிதறிக் காணப்படும். வயிற்றுப்புறமும் கால்களும் வெண்மையாகவும், ஆரஞ்சு நிற விரல்களுடன் காணப்படும். கண்கள் தங்க நிறமுடையது. ஆண் தவளையினை விடப் பெண் தவளை பெரியது. இவை முக்கியமாகப் பூச்சிகளைச் சாப்பிடுகின்றன. இரவாடி வகையினைச் சார்ந்த இந்த தவளைகள் பகல் பொழுதினை கற்கள் அல்லது மரத்தடிகளின் கீழ் செலவிடுகின்றன.

இதன் இயற் வாழ்விடங்களாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், ஆற்றிடைப்பகுதி, நன்னீரிடை சதுப்புநிலங்கள், நீர் சேமிப்பு பகுதிகள் மற்றும் குளங்கள் முதலியன. இந்த தவளை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அச்சுறுத்தப்பட்ட இனப் பட்டியலில் இல்லை.

குளங்கள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு அருகில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. முட்டைகளைக் கொத்தாகத் தண்ணீருக்கு மேலே காணப்படும் தாவரங்கள் மீது இடுகின்றன. முட்டையிலிருந்து பொரிக்கும் குஞ்சுகள் நேரிடையாக தண்ணீரில் விழுந்து வளர்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Santos-Barrera, G. & Canseco-Márquez, L. 2004. Pachymedusa dacnicolor. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 21 July 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலிச்னிசு_டேக்னிகலர்&oldid=3592309" இலிருந்து மீள்விக்கப்பட்டது