அகன்ஷா தாமினி ஜோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகன்க்ஷா தாமினி ஜோஷி
பிரிஸ்டலில் அகன்க்ஷா தாமினி ஜோஷி, 2012
பிறப்பு27 செப்டம்பர் 1976 (1976-09-27) (அகவை 47)
ஐதராபாத்து, இந்தியா
பணிஇயக்குநர், ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிலிக்கா பேங்க்$, எர்த் விட்னஸ், ஹிந்து நெக்டர்
வலைத்தளம்
www.daminijosh.in

அகன்க்ஷா தாமினி ஜோஷி (Akanksha Damini Joshi) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.[1] [2]

தொழில்[தொகு]

ஜோஷி, வகுப்புவாத மோதல், சுற்றுச்சூழல் நெருக்கடி, ஆன்மீக தத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். குஜராத் வன்முறை 2002 பற்றிய மோதல்களைப் பதிவு செய்ததன்ன் மூலம் இவரது வாழ்க்கை தொடங்கியது.[3] [4] பின்னர் அவர் ஒடிசாவில் சில்கா ஏரியின் கரையோரத்தில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த திரைப்படம் எடுக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டார். (சிலிக்கா கரை$: இந்தியாவின் மிகப்பெரிய கடலோர ஏரியிலிருந்து கதைகள் ).[5] [6] பின்னர் இவர் காலநிலை மாற்றம் குறித்த தனது திரைப்படத்தை உருவாக்கினார்.[7] 2014ஆம் ஆண்டில், இவர் இந்து மெய்யியலைப் பற்றி - இந்து அமிர்தம்: இந்தியாவில் ஆன்மீக அலைதல் என்ற நிகழ்படத்தை உருவாக்கினார்.[8] இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். கங்கை ஆறு பற்றிய ஜோஷியின் குறும்படம்- கங்கை: ஏக் பிரார்த்தனா, 2007 உலகளாவிய காலநிலை மாற்றத்தின் கலாச்சார-குறிப்பிட்ட அடையாளத்தின் மூலம் உரையாற்றுகிறது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akanksha Joshi". ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on 17 February 2017. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  2. "Filmmaker Akanksha Joshi Explores the Internal and External World of Indian Consciousness". Soft Power.
  3. "World View". இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  4. "Witness to a changing world". indiatogether. Archived from the original on 24 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  5. "Lament of a lake". Uday India. Archived from the original on 19 July 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  6. "Independence Day 2020: 28 films for 28 states". Mint.
  7. "Earth Witness: Reflections on the times and the timelessness". VIKALP BENGALURU. Archived from the original on 24 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  8. "HINDU NECTAR BY AKANKSHA JOSHI". PSBT. Archived from the original on 24 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  9. "For a clean, green world". AhmedabadMirror. Archived from the original on 12 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன்ஷா_தாமினி_ஜோசி&oldid=3294647" இலிருந்து மீள்விக்கப்பட்டது