அகதா புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகதா (புயல்)
Tropical Storm Agatha
வெப்பவலயப் புயல் (SSHWS/NWS)
Agatha 29 May 2010.jpg
மே 29, 2010 இல் அகதா புயலின் செய்மதிப் படிமம்
தொடக்கம்மே 29,2010
மறைவுமே 30, 2010
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 45 mph (75 கிமீ/ம)
தாழ் அமுக்கம்1000 பார் (hPa); 29.53 inHg
இறப்புகள்146 பேர் இறப்பு, 64 காணாமல் போயினர்
பாதிப்புப் பகுதிகள்நடு அமெரிக்கா
2010 பசிபிக் புயல்-இன் ஒரு பகுதி

அகத்தா புயல் (Tropical Storm Agatha) என்பது 2010, மே 29 இல் நடு அமெரிக்காவின் பல பகுதிகளில் தாக்கிய வெப்பவலயப் புயல் ஆகும். இப்புயல் தாக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கிழக்கு பசிபிக் பகுதியில் 1997 ஆம் ஆண்டு வீசிய புயலுக்குப் பின்னர் இச்சூறாவளியே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அகத்தா மே 29 ஆம் நாள் ஆரம்பித்து மே 30 இல் முடிவுக்கு வந்தது. காற்று ஆகக்கூடியது 45 மை/மணி (75 கிமீ/மணி) வேகத்தில் வீசியது. மே 29 மாலை நேரம் இப்புயல் குவாத்தமாலா-மெக்சிக்கோ எல்லைப்பகுதியைத் தரை தட்டியது. இப்புயல் காரணமாக நடு அமெரிக்கா முழுவதும் பெரும் மழை பெய்தது. குவாத்தமாலாவில் 118 பேர் உயிரிழந்தனர், 53 பேர் மண்சரிவு காரணமாகக் காணாமல் போயுள்ளனர். எல் சல்வடோரில் 18 பேரும், நிக்கராகுவாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புயல் காரணமாக குவாத்தமாலாவில் மிக கடுமையாக மழை பெய்தது. இதனால் சுமார் 3 அடி உயரத்துக்கு வீதிகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

தலைநகர் குவாத்தமாலா அருகேயுள்ள சான்அன்டோனியோ பலோபோ நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் வீதிகள் போன்றவையும் மண்ணுக்குள் மறைந்தன.

கோப்பித் தோட்டங்கள் பூமிக்குள் புதைந்து நாசமானது. மேலும் ஸ்வல்லன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரை உடைந்தது. இதையடுத்து வெள்ளம் கிராமங்களில் புகுந்தது.

குவாத்தமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல் சால்வடோர், ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை பெய்ததால் அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டன.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதா_புயல்&oldid=2266427" இருந்து மீள்விக்கப்பட்டது