ஃபைஸ் ஃபசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபைஸ் யாகுப் ஃபசல் (Faiz Yakub Fazal) (பிறப்பு 7 செப்டமபர், 1985) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2003 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2005 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 117 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 7,888 ஓட்டங்களையும் , 95 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2996 ஓட்டங்களையும் ,1 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 55 ஓட்டங்களையும் 66 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1273 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

ஜூலை 2018 இல், 2018–19 துலீப் கோப்பைக்கான இந்தியா ப்ளூ அணியின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். [1] ஆகஸ்ட் 2019 இல், அவர் 2019–20 துலீப் கோப்பைக்கான இந்தியா கிரீன் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். [2] [3]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் 2003 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 17 நாக்பூர் துடுப்பாட்ட அரங்கத்தில் சம்மு காஸ்மீர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விதர்பா துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பின் 2019 ஆம் ஆண்டில் பெங்களூரு துடுப்பாட்ட அரங்கத்தில் இநியா ரெட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியா கிரீன் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

2005 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். சனவரி 9 இந்தூர் துடுப்பாட்ட அரங்கத்தில் ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விதர்பா துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பின் 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 17 வதோதரா துடுப்பாட்ட அரங்கத்தில் மகாராட்டிர துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விதர்பா துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

இருபது20[தொகு]

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 3 ஜெய்பூர் துடுப்பாட்ட அரங்கத்தில் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விதர்பா அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பின் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 14 தும்பா துடுப்பாட்ட அரங்கத்தில் கேரளா துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் விதர்பா துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

20116 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சூன் 15 அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபைஸ்_ஃபசல்&oldid=2870470" இருந்து மீள்விக்கப்பட்டது