ஃபாலிங்வாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபாலிங்வாட்டர்
U.S. National Register of Historic Places
Wrightfallingwater.jpg
ஃபாலிங்வாட்டரின் புகழ்பெற்ற தோற்றம்
ஃபாலிங்வாட்டர் is located in பென்சில்வேனியா
ஃபாலிங்வாட்டர்
அமைவிடம்: மில் ரண், பென்சில்வேனியா
கிட்டிய நகர்: பிட்ஸ்பர்க்
ஆள்கூறுகள்: 39°54′23″N 79°27′54″W / 39.90639°N 79.46500°W / 39.90639; -79.46500
அமைப்பு: 1935
கட்டிடக் கலைஞர்: பிராங்க் லாயிட் ரைட்
கட்டிடக்கலைப் பாணி: நவீனத்துவம்
Added to NRHP: ஜூலை 23 1974
Visitation: ஏறத்தாழ 135,000 ()
NRHP Reference#: 74001781[1]
Governing body: மேற்கு பென்சில்வேனியக் காப்பகம்

ஃபாலிங்வாட்டர் (Fallingwater), என்பது 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க் லாயிட் ரைட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு வீடு ஆகும். உரிமையாளரின் பெயரால் இது மூத்த எட்கார் காஃப்மன் வீடு எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது 1935 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க்கிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள தென்மேற்குப் பென்சில்வேனியாவின் நாட்டுப்புறப் பகுதியொன்றில் கட்டப்பட்டது. இவ் வீட்டின் ஒரு பகுதி அருவியொன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இவ் வீடு கட்டி முடிக்கப்பட்டதும், "ரைட்டின் மிக அழகான கட்டிடம் இதுவே" என "டைம்" இதழ் புகழ்மாலை சூட்டியது.

வரலாறு[தொகு]

மூத்த எட்கார் காஃப்மன் பிட்ஸ்பர்க் நகரின் வெற்றிகரமான வணிகர்களுள் ஒருவர். அந் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றை நடத்தி வந்தார். இவரது மகனான இளைய எட்கார் காஃப்மன் சிறிது காலம் பிராங்க் லாயிட் ரைட்டின் கீழ் கட்டிடக்கலை பயின்று வந்தார். ஒருமுறை ரைட், காஃப்மனின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். அவ் வீடு புகழ் பெற்ற பிட்ஸ்பார்க் கட்டிடக்கலைஞரான பென்னோ ஜான்சன் (Benno Janssen) என்பவரால் 1923 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. இளைய காஃப்மனுடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த ரைட், மூத்த காஃப்மனுக்குக் கேட்கும்படியாக, அந்த வீடு காஃப்மனின் பெருமைக்குப் பெறுமதியானதல்ல என்றாராம். இது, பெறுமதியாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை மூத்த காஃப்மனிடம் உருவாக்கியது.

காஃப்மனுக்கு, பிட்ஸ்பர்க்குக்கு வெளியே அருவியொன்றுடன் கூடிய நிலம் ஒன்றிருந்தது. அதிலிருந்த சில கட்டிடங்கள் பழுதடைந்திருந்தன. அதற்கு ஏதாவது செய்யவேண்டிய நிலையில் காஃப்மன், ரைட்டைத் தொடர்புகொண்டார்.

1934 ஆம் ஆண்டில் ரைட் பெயார் ரண் என்னும் அவ்விடத்துக்கு வந்தார். ரைட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நிலத்தின் நில அளவைப் படமொன்று வரையப்பட்டது. பிட்ஸ்பர்க்கிலிருந்த பொறியியல் நிறுவனம் ஒன்றினால் அளந்து வரியப்பட்ட அப்படம் அந் நிலத்தில் இருந்த பாறைகள், மரங்கள், ஏற்ற இறக்கங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் தெளிவாகக் காட்டியது. தொடக்க எண்ணக்கருக்களை உருவாக்குவதற்கு ரைட்டுக்கு 9 மாதங்கள் பிடித்தன. 1935 செப்டெம்பரில் காஃப்மனிடன் இவ்வெண்ணங்களை விளக்கும் வரைபடங்கள் கையளிக்கப்பட்டன. அப்போதுதான் தான் நினைத்தது போல் வீடு, அருவிக்குக் கீழ் இராமல் அருவியின் மேல் இருந்தது காஃப்மனுக்குத் தெரியவந்தது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. பார்த்த நாள் 2006-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபாலிங்வாட்டர்&oldid=1352079" இருந்து மீள்விக்கப்பட்டது