காலிகோ ஜாக்
ஜான் ராக்காம் | |
---|---|
கேப்டன் சார்லஸ் ஜான்சனின் 1725 ஆம் ஆண்டு பதிப்பான "எ ஜெனரல் ஹிஸ்டரி ஆஃப் தி பைரேட்ஸ்" என்ற நூலிருந்து ராக்காமின் உருவப்படம் | |
இறப்பு | 18 நவம்பர் 1720 போர்ட் ராயல், ஜமைக்கா |
கடற் கொள்ளை தொடர்பில் | |
பட்டப்பெயர் | காலிகோ ஜாக் |
வகை | கடல் கொள்ளை |
இயங்கிய காலம் | 1720 |
தரநிலை | தலைவன்[1] |
செயற்பாட்டுக் களம் | மேற்கிந்தியத் தீவுகள் |
கட்டளைகள் | வில்லியம் (சுருக்கமாக) |
சண்டைகள்/ போர்கள் | வில்லியம் என்ற ஆயுதமேந்திய சுலூப்பைத் திருடிது |
ஜான் ராக்காம் (John Rackham) (18 நவம்பர் 1720 இல் தூக்கிலிடப்பட்டார்), பொதுவாக காலிகோ ஜாக் என்று அழைக்கப்படும் இவன், 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பகாமாசு மற்றும் கியூபாவில் செயல்பட்ட ஒரு ஆங்கில கடல் கொள்ளைத் தலைவன் ஆவான். இவனது புனைப்பெயர் இவன் அணிந்திருந்த காலிகோ ஆடையிலிருந்து பெறப்பட்டது. அதே நேரத்தில் ஜாக் என்பது "ஜான்" என்பதற்கான புனைப்பெயர்.
ராக்கம் கடற்கொள்ளையர்களின் பொற்காலத்தின் முடிவில் தீவிரமாக இருந்தான். மேரி ரீட் மற்றும் ஆன் போனி ஆகிய இரண்டு பெண் குழு உறுப்பினர்களுடன் கொள்ளையில் ஈடுப்பட்டதற்காக மிகவும் நினைவுகூரப்படுகிறான்.
கொள்ளைத் தொழில்
[தொகு]ராக்கம், சார்லஸ் வேன் என்ற கொள்ளையனை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தானே தலைவனாகி பின்னர் லீவர்டு தீவுகள், ஜமைக்கா கால்வாய் மற்றும் விண்ட்வார்ட் கடல் பாதையில் கொள்ளையில் ஈடுபட்டான். 1719இல் மன்னிக்கப்பட்ட இவன் நியூ பிராவிடன்ஸுக்கு குடிபெயர்ந்தான். அங்கு ஆன் போனியைச் சந்தித்தான். இவர்களுடன் மேரி ரீடும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் பிற கொள்ளையர்கள் நடுவே ஆண் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். 22 ஆகஸ்ட் 1720 அன்று, மூவரும் நாசாவுவில் உள்ள துறைமுகத்திலிருந்து வில்லியம் என்ற ஆயுதமேந்திய சுலூப்பைத் திருடினர்.[2][3][4]
கைதும் சிறையும்
[தொகு]அக்டோபர் 1720 இல், ஜமைக்காவின் ஆளுநரான நிக்கோலஸ் லாவ்ஸின் ஆணையின் கீழ் ஜொனாதன் பார்னெட் தலைமையிலான ஒரு குழு மூலம் ராக்காமும் அவனது குழுவினரும் தாக்கப்பட்டனர். ராக்காமின் பெரும்பாலான கடற்கொள்ளையர்கள் குடிபோதையில் இருந்ததால் அவர்களால் எதிர்ப்பை வெளிபடுத்த முடியவில்லை. அவர்கள் பிடிக்கப்பட்டு ஜமைக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு ஆளுநர் லாவ்ஸ் தீர்ப்பளித்தார்.[5][6]
மேரி ரீட் மற்றும் ஆன் இருவரும் " தாங்கள் கருவுற்றிருந்ததால்" மன்னிப்பைக் கோரினர்.[7] நீதிமன்றம் இவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை மரணதண்டனையை நிறுத்திவைத்தது. பிரசவத்தின்போது ஏற்பட்ட காய்ச்சலால் மேரி ரீட் சிறையிலேயே இறந்தார்.[8][9]
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biography of John "Calico Jack" Rackham
- ↑ Rogers, Woodes (10 October 1720). "A proclamation". The Boston Gazette.
- ↑ Woodard, Colin. "Mary Read Biography". Archived from the original on 4 January 2020. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
- ↑ Cordingly, David (2006). Under the Black Flag. New York: Random House. pp. 57–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0812977226.
- ↑ Zettle, LuAnn. "Anne Bonny The Last Pirate". Archived from the original on 22 May 2019.
- ↑ Legendary Pirates The Life and Legacy of Anne Bonny . Charles River Editors, 2018.
- ↑ Yolen (1995). The Ballad of the Pirate Queens. pp. 23–24.
- ↑ Bartleme, Tony (28 November 2020). "A 22-year-old YouTuber may have solved Anne Bonny pirate mystery 300 years after trial". The Post and Courier. Archived from the original on 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
- ↑ "Did English pirate Calico Jack design the Jolly Roger?". Telegraph. 5 December 2016. https://www.telegraph.co.uk/only-in-britain/english-pirate-calico-jack/.
மேலும் படிக்க
[தொகு]- Nelson, James L. (2004) A Short Life and A Merry One. Ithaca NY: McBooks.
- Defoe, Daniel; Manuel Schonhorn (1999). The General History of Pirates. New York: Dover Publications. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-40488-9.
- Fleming, Carrol B (March 1978). Ladies of the Skull and Crossbones. Historical Abstracts. pp. 23–26.
- Williams, Jefferey (2007). Pirate Spirit: The Adventures of Anne Bonney. Harlem Writers Guild Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58348-467-8.
- The entire trial transcript is available in the book The Pirate Trial of Anne Bonny and Mary Read பரணிடப்பட்டது 2 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம் by Tamara J. Eastman and Constance Bond
- Johnson, Captain Charles, A General History of the Pyrates|A General History of the Pyrates: From their first rise and settlement in the island of Providence, to the present time. London: T. Warner. First published in 1724, with the second volume published 1728, both later attributed to Daniel Defoe. Note that the General History's details of the capture of the merchant ship Neptune by Charles Vane in September 1718 conflict with the court records of both Charles Vane and Robert Deal, his quartermaster.
- The Tryals of Captain John Rackam and Other Pirates, 1721, by Robert Baldwin, in The Colonial Office Records in The Public Records Office at Kew, (ref: CO 137/14f.9). This details the trials of Jack Rackam, Mary Read, Anne Bonny, and Charles Vane.