நீண்ட வால் சூரை
நீண்ட வால் சூரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகோம்பிரிபார்மிசு
|
குடும்பம்: | இசுகோம்பிரிடே
|
பேரினம்: | துன்னசு
|
இனம்: | து. தோங்கோல்
|
இருசொற் பெயரீடு | |
துன்னசு தோங்கோல் (பிளீக்கர், 1851) | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
துன்னசு தோங்கோல் (Thunnus tonggol) என்பது வெப்பமண்டல இந்தோ-மேற்கு பசிபிக் கடலில் காணப்படும் சூரை மீன் சிற்றினமாகும்.
இது பொதுவாக நீண்ட வால் சூரை அல்லது வடக்கு நீலத்துடுப்பு சூரை என்று அழைக்கப்படுகிறது.[1] தெற்கு நீலத்துடுப்பு சூரையினை வேறுபடுத்துவதற்காக ஆத்திரேலியாவில் வடக்கு நீலத்துடுப்பு சூரை என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர்.[4][5] அத்லாந்திக்கின் துன்னசு தைனசு மற்றும் வடக்கு பசிபிக்கின் துன்னசு ஓரியண்டலிசு ஆகியவற்றுடன் எளிதில் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. இந்த "உண்மையான" நீல நிறத் துடுப்புகளுடன் ஒப்பிடும்போது, துன்னசு தோங்கோல் மிகவும் மெல்லியதாகவும், குறுகிய மார்பகத் துடுப்புகளைக் கொண்டதாகவும் உள்ளது.[4][5]
து. தோங்கோல் உடல் நீளம் 145 சென்டி மீட்டர் (57 அங்குல) வரையும் எடை, 35,9 கிலோகிராம் வரையும் வளரக்கூடியது.[3] ஒத்த அளவிலான சூரை மீன்களை ஒப்பிடும்போது, இதன் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இவை நீண்ட காலம் வாழக்கூடியது. இது அதிகப்படியான மீன்பிடிப்பு காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Miyabe, N.; Nelson, R.; Sun, C.; Uozumi, Y. (2011). "Thunnus tonggol". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T170351A6763691. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170351A6763691.en. http://www.iucnredlist.org/details/170351/0. பார்த்த நாள்: 24 December 2017.
- ↑ "Thunnus tonggol". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- ↑ 3.0 3.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Thunnus tonggol" in FishBase. December 2011 version.
- ↑ 4.0 4.1 Hutchins, B. & Swainston, R. (1986). Sea Fishes of Southern Australia. pp. 104 & 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86252-661-3
- ↑ 5.0 5.1 Allen, G. (1999). Marine Fishes of Tropical Australia and South-East Asia. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7309-8363-3
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கியினங்களில் நீண்ட வால் சூரை பற்றிய தரவுகள்