உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட வால் சூரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் சூரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுகோம்பிரிபார்மிசு
குடும்பம்:
இசுகோம்பிரிடே
பேரினம்:
துன்னசு
இனம்:
து. தோங்கோல்
இருசொற் பெயரீடு
துன்னசு தோங்கோல்
(பிளீக்கர், 1851)
வேறு பெயர்கள் [2][3]
  • தைன்னசு தோங்கோல் பிளீக்கர், 1851
  • கிசினோயெல்லா ராரா (கிசினௌயே, 1915)
  • கிசினோயெல்லா தோங்கோல் (பிளீக்கர், 1851)
  • நியோதுன்னசு தோங்கோல் (பிளீக்கர், 1851)
  • நியோதுன்னசு ராரசு (கிசினௌயே, 1915)
  • துன்னசு நிக்கோல்சோனி விட்லி, 1936
  • துன்னசு ராரசு கிசினௌயே, 1915

துன்னசு தோங்கோல் (Thunnus tonggol) என்பது வெப்பமண்டல இந்தோ-மேற்கு பசிபிக் கடலில் காணப்படும் சூரை மீன் சிற்றினமாகும்.

இது பொதுவாக நீண்ட வால் சூரை அல்லது வடக்கு நீலத்துடுப்பு சூரை என்று அழைக்கப்படுகிறது.[1] தெற்கு நீலத்துடுப்பு சூரையினை வேறுபடுத்துவதற்காக ஆத்திரேலியாவில் வடக்கு நீலத்துடுப்பு சூரை என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர்.[4][5] அத்லாந்திக்கின் துன்னசு தைனசு மற்றும் வடக்கு பசிபிக்கின் துன்னசு ஓரியண்டலிசு ஆகியவற்றுடன் எளிதில் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. இந்த "உண்மையான" நீல நிறத் துடுப்புகளுடன் ஒப்பிடும்போது, துன்னசு தோங்கோல் மிகவும் மெல்லியதாகவும், குறுகிய மார்பகத் துடுப்புகளைக் கொண்டதாகவும் உள்ளது.[4][5]

து. தோங்கோல் உடல் நீளம் 145 சென்டி மீட்டர் (57 அங்குல) வரையும் எடை, 35,9 கிலோகிராம் வரையும் வளரக்கூடியது.[3] ஒத்த அளவிலான சூரை மீன்களை ஒப்பிடும்போது, இதன் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இவை நீண்ட காலம் வாழக்கூடியது. இது அதிகப்படியான மீன்பிடிப்பு காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Miyabe, N.; Nelson, R.; Sun, C.; Uozumi, Y. (2011). "Thunnus tonggol". The IUCN Red List of Threatened Species (IUCN) 2011: e.T170351A6763691. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170351A6763691.en. http://www.iucnredlist.org/details/170351/0. பார்த்த நாள்: 24 December 2017. 
  2. "Thunnus tonggol". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. 3.0 3.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Thunnus tonggol" in FishBase. December 2011 version.
  4. 4.0 4.1 Hutchins, B. & Swainston, R. (1986). Sea Fishes of Southern Australia. pp. 104 & 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86252-661-3
  5. 5.0 5.1 Allen, G. (1999). Marine Fishes of Tropical Australia and South-East Asia. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7309-8363-3

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_சூரை&oldid=4050871" இலிருந்து மீள்விக்கப்பட்டது