பார்த்தசாரதி கோயில், முண்டக்காயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்த்தசாரதி கோயில், முண்டக்காயம் என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கஞ்சிரப்பள்ளி வட்டத்தில் உள்ள முண்டக்காயம் நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . இது குட்டிக்கானம் செல்லும் சாலையில் கோட்டயத்திலிருந்து சுமார் 52 கி.மீ. தொலைவிலும், குட்டிக்கானத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் பார்த்தசாரதி (அர்ஜுனனின் தேரோட்டியாக கிருஷ்ணர் ) ஆவார். இங்குகணபதி, ஐயப்பா, நாகராஜர், யட்சி ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன.

விழாக்கள்[தொகு]

மலையாள மகரம் (ஜனவரி/பிப்ரவரி) மாதத்தில் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆறு நாட்கள் வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. [1] [2] தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Says, Mullai Kumaran (26 November 2013). "Kerala Vishnu Temple Festival Calendar". பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
  2. Tourist Guide, to Kerala. Temples and Festivals.