உள்ளடக்கத்துக்குச் செல்

சுமித் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுமித் சர்க்கார் (Sumit Sarkar, பிறப்பு 1939) என்பவர் நவீன இந்திய வரலாற்றாசிரியரும். சுதேசி இயக்கம் என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை, கல்வி, தொழில்

[தொகு]

இவர் சுசோபன் சர்க்காரின் மகனாவார். பிரசந்தா சந்திரா மகாலனோபிசு இவரது தாய் மாமா ஆவார்.

இவர் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் பி.ஏ (ஹானர்ஸ்) முடித்தார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை மற்றும் முனைவர் ஆய்வை முடித்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பல ஆண்டுகள் கற்பித்தல் பணி செய்தார் பின்னர் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் ரீடராக பணிபுரிந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள வொல்ப்சன் கல்லூரியில் முதுமுனைவர் பட்டப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார்.[1]

விருதுகள்

[தொகு]

2004 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசால் இவரது சமூக வரலாற்றை எழுதுதல் என்ற நூலுக்காக இவருக்கு ரவீந்திர புரஸ்கார் இலக்கிய விருது வழங்கப்பட்டது. 2007ல் விவசாயிகளை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த விருதை இவர் திருப்பி அளித்தார்.[2]

வெளியீடுகள்

[தொகு]
  • Modern Times(Ranikhet, 2014)
  • Towards Freedom: Documents on the Movement for Independence in India, 1946, (New Delhi, 2007)
  • Beyond Nationalist Frames: Post-Modernism, Hindu Fundamentalism, History, (Delhi, 2002)
  • Writing Social History, (Delhi, 1998)
  • Khaki Shorts and Saffron Flags: A Critique of the Hindu Right, (with Tapan Basu, Pradip Datta, Tanika Sarkar and Sambuddha Sen; Orient Longman, 1993). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863113834.
  • Modern India: 1885-1947, (Basingstoke, 1989)
  • The Swadeshi Movement in Bengal, 1903-1908, (New Delhi, 1973)

குறிப்புகள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 27 January 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Nandigram was more shocking than Jallianwala Bagh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2007-03-17. http://timesofindia.indiatimes.com/articleshow/1774467.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_சர்க்கார்&oldid=3742599" இலிருந்து மீள்விக்கப்பட்டது