உள்ளடக்கத்துக்குச் செல்

சுமித் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமித் சர்க்கார்
பிறப்பு1939
இறப்பு(2026-08-13)ஆகத்து 13, 2026
தொழில்வரலாற்றாசிரியர்
கல்வி நிலையம்கொல்கத்தா பல்கலைக்கழகம்
மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
குறிப்பிடத்தக்க விருதுகள்இரவீந்திர விருது (2004)

சுமித் சர்க்கார் (Sumit Sarkar, 1939 – 13 ஆகத்து 2026) என்பவர் நவீன இந்திய வரலாற்றாசிரியரும். சுதேசி இயக்கம் என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.

தொடக்க வாழ்க்கை, கல்வி, தொழில்

[தொகு]

சுமித் சர்க்கார் சுசோபன் சர்க்காரின் மகனாவார். பிரசந்தா சந்திரா மகாலனோபிசு இவரின் தாய்மாமன் ஆவார்.

இவர் கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை (ஹானர்ஸ்) முடித்தார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பல ஆண்டுகள் கற்பித்தல் பணி செய்தார் பின்னர் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஆக்ஸ்போர்டில் உள்ள வொல்ப்சன் கல்லூரியில் முதுமுனைவர் பட்டப்படிப்பை முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார்.[1]

விருதுகள்

[தொகு]

2004 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசால் இவரது சமூக வரலாற்றை எழுதுதல் என்ற நூலுக்காக இரவீந்திர புரஸ்கார் இலக்கிய விருது வழங்கப்பட்டது. 2007இல் நடத்தபட்ட நந்திகிராம் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த விருதை இவர் திருப்பி அளித்தார்.[2]

வெளியீடுகள்

[தொகு]
  • Modern Times(Ranikhet, 2014)
  • Towards Freedom: Documents on the Movement for Independence in India, 1946, (New Delhi, 2007)
  • Beyond Nationalist Frames: Post-Modernism, Hindu Fundamentalism, History, (Delhi, 2002)
  • Writing Social History, (Delhi, 1998)
  • Khaki Shorts and Saffron Flags: A Critique of the Hindu Right, (with Tapan Basu, Pradip Datta, Tanika Sarkar and Sambuddha Sen; Orient Longman, 1993). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863113834.
  • Modern India: 1885-1947, (Basingstoke, 1989)
  • The Swadeshi Movement in Bengal, 1903-1908, (New Delhi, 1973)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Archived copy". Archived from the original on 17 July 2011. Retrieved 27 January 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. ↑ "Nandigram was more shocking than Jallianwala Bagh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2007-03-17. http://timesofindia.indiatimes.com/articleshow/1774467.cms.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமித்_சர்க்கார்&oldid=4633298" இலிருந்து மீள்விக்கப்பட்டது