சுபாவதி பசுவான்
சுபாவதி பசுவான் (Subhawati Paswan) என்பவர் சுபாவதி தேவி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசியல்வாதியும் பதினொராவது மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பான்சுகான் மக்களவைத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]
இளமை
[தொகு]சுபாவதி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிந்தாபூர் கிராமத்தில் 1952 மே 15 அன்று பிறந்தார்.[2]
தொழில்
[தொகு]பான்ஸ்கான் தொகுதி பட்டியல் சாதி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக, சுபாவதி 1996 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ் நரேன் பாசிக்கு எதிராக 2,03,591 வாக்குகள் பெற்றார். இவர் பாஜக வேட்பாளரைவிட 4.96% வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[3] இருப்பினும், 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், இவர் முறையே 31.67% மற்றும் 29.23% வாக்குகளைப் பெற்று, பாசியிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[4] 2004 தேர்தலில் 1,35,499 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.[5] இதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இவரது மகன் கமலேசு பசுவான் வெற்றி பெற்றார்.[6]
பசுவான் பாஜகவுக்கு மாறி 2012 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பான்சுகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதே தொகுதியில் பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஆதரவாளர் ஒருவர் போட்டியிட்டதால்[7] இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவரால் 24,576 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுபாவதி 10 ஏப்ரல் 1970-ல் ஓம் பிரகாசு பசுவானை மணந்தார்.[2] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chandra, Kanchan (2016). Democratic Dynasties: State, Party and Family in Contemporary Indian Politics. Cambridge University Press. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-12344-1.
- ↑ 2.0 2.1 "Members Bioprofile: Subhawati Paswan". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 448. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "General Elections 2004 - Partywise Comparison for 33-Bansgaon Constituency of Uttar Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Election Commission of India. p. 314. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "Members Bioprofile: Paswan, Shri Kamlesh". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "Yogi in full flow: ‘justice for anything that’s anti-Hindu’". http://archive.indianexpress.com/news/yogi-in-full-flow--justice-for-anything-that-s-antihindu-/908301/. பார்த்த நாள்: 6 November 2017.
- ↑ "Statistical Report on General Elections, 2012 to the Legislative Assembly of Uttar Pradesh" (PDF). Election Commission of India. p. 622. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
- ↑ "Subhawati Devi Affidavit". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.