உள்ளடக்கத்துக்குச் செல்

பிப்ரான் பவளப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிப்ரான் பவளப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
கல்லியோபிசு
இனம்:
க. பிப்ரோனி
இருசொற் பெயரீடு
கல்லியோபிசு பிப்ரோனி
ஜான், 1858
வேறு பெயர்கள் [3]
  • எலாப்சு பிப்ரோனி
    ஜான், 1858
  • எலாப்சு செராசினசு
    பெடோமி, 1864
  • கலோபிசு செராசினசு
    — பெடோமி, 1867
  • கலோபிசு பிப்ரோனி
    — பெளலெஜ்சர், 1890
  • கல்லியோபிசு பிப்ரோனி
    — சுலோவின்சுகி, பவுண்டி, &
    லாவ்சன், 2001
    [2]

பிப்ரான் பவளப்பாம்பு (Bibron's coral snake) என்று அழைக்கப்படும் கல்லியோபிசு பிப்ரோனி (Calliophis bibroni) ஊர்வனவற்றில் எலாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு நச்சுப் பாம்பு ஆகும். இந்தப் பாம்பு சிற்றினம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது.

சொற்பிறப்பியல்

[தொகு]

பிப்ரான் பவளப்பாம்பின் சிற்றினப் பெயர், பிப்ரோனி, கேப்ரியல் பிப்ரான் (1806-1848) எனும் பிரெஞ்சு விலங்கியல் மற்றும் கெர்பெட்டாலஜிஸ்ட் நினைவாக இடப்பட்டது.[4]

பரவலும் வாழிடமும்

[தொகு]

க. பிப்ரோனி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது முக்கியமாக தெற்கு கர்நாடகா மாநிலம், கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் காணப்படுகிறது. க. பிப்ரோனி கடல் மட்டத்திலிருந்து 1–1,220 மீ. உயரத்தில் காணப்படும் ஈரக் காடுகள் ஆகும்.

ஆகத்து 2013-ல், 894 மீ. உயரத்தில் முதுமலை தேசிய பூங்கா வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில் இறந்த பாம்பின் மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது.[5]

விளக்கம்

[தொகு]

சி. பிப்ரோனியின் கண் சிறியது. இதன் விட்டம் வாயிலிருந்து பாதி தூரம் உடையது. முன்பகுதியானது மூக்கிலிருந்து அதன் தூரம் வரை நீளமானது, உச்சியினை விட மிகக் குறுகியது. கண் முன்பகுதி இல்லாததால், நெற்றிப்பகுதி மூன்றாவது மேல் உதட்டுடன் தொடர்புடையது. மிகச் சிறிய கண் பின்பகுதி ஒன்று உள்ளது. பக்க மண்டைப் பகுதி 1+1. இரண்டு இணை கன்ன கவசங்கள் உள்ளன. முன்புறமுள்ள கன்னம் கவசங்கள் சிறியவை, பின்புறத்தை விட மிகச் சிறியவையாக மூன்றாவது மற்றும் நான்காவது கீழ் உதட்டுடன் தொடர்ந்துள்ளன.[2]

முதுகுச் செதில்கள் மென்மையானவை, நுனிக் குழிகள் இல்லாமல், நடுப்பகுதியில் 13 வரிசைகளில் இருக்கும். வயிற்றுத் தகடுகள் 222-226 வரையில் எண்ணிக்கையில் காணப்படும். குத தகடு முழுமையாகக் காணப்படும். வால் தகடுகள் பிரிக்கப்பட்டு 27-34 இணைகளாக உள்ளன.[2]

இதனுடைய உடல் நிறம் செர்ரி-சிவப்பு முதல் அடர் ஊதா பழுப்பு வரை, கீழே சிவப்பு, கருப்பு குறுக்கு பட்டைகளுடன் சில நேரங்களில் வயிற்றுப்பகுதி முழுவதும் தொடர்ந்து காணப்படும். தலையின் முன் பகுதியில் மேலே கருப்பு வண்ணமாகக் காணப்படும். [2]

முதிர்ச்சியடைந்த பாம்பின் உடல் நீளம் 64 செ.மீ. வரை இருக்கும். இதில் வால் நீளம் 5 செ.மீ. அடங்கும்.[2]

உணவு

[தொகு]

சி. பிப்ரோனி ஓபியோபாகசு எனப்படும் பாம்புகளை உண்ணக்கூடிய வாழ்க்கை முறையினைக் கொண்டுள்ளது. இது, யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளை வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்றது.

இனப்பெருக்கம்

[தொகு]

சி. பிப்ரோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srinivasulu, C.; Deepak, V.; Shankar, G.; Srinivasulu, B. (2011). "Calliophis bibroni". IUCN Red List of Threatened Species 2011: e.T177549A7454847. https://www.iucnredlist.org/species/177549/7454847. பார்த்த நாள்: 18 October 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Boulenger GA (1896).
  3. சிற்றினம் Calliophis bibroni at The Reptile Database www.reptile-database.org.
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
  5. Samson, A.; Ramakrishnan, B.; Rathinakumar, S.; Renuka, S.; Santhoshkumar, P.; Karthick, S. (2014). "Calliophis bibroni (Bibroni Coral Snake): Rediscovery in Mudumalai Tiger Reserve, South India". Herpetological Bulletin 127: 35–36. https://www.researchgate.net/publication/308656175. 

மேலும் படிக்க

[தொகு]
  • Beddome RH (1864). "Description of a New Species of Elaps from Malabar". Proc. Zool. Soc. London 1864: 179.
  • Boulenger GA (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Callophis [sic] bibronii, p. 386).
  • Deepak V, Harikrishnan S, Vasudevan K, Smith EN (2010). "Redescription of Bibron's coral snake, Calliophis bibroni Jan 1858 with notes and new records from south of the Palghat and Shencottah Gaps of the Western Ghats, India". Hamadryad 35 (1): 1–10.
  • Jan G (1858). "Plan d'une iconographie descriptive des ophidiens et description sommaire de nouvelles espèces des serpents". Revue et Magasin de Zoologie Pure et Appliquée, Paris, Series 2, 10: 438–449, 514–527. (Elaps bibroni, new species, p. 526). (in French).
  • Raveendran DK, Deepak V, Smith EN, Smart U (2017). "A new colour morph of Calliophis bibroni (Squamata: Elapidae) and evidence for Müllerian mimicry in Tropical Indian coralsnakes". Herpetology Notes 10: 209–217.
  • Slowinski JB, Boundy J, Lawson R (2001). "The Phylogenetic Relationships of Asian Coral Snakes (Elapidae: Calliophis and Maticora) Based on Morphological and Molecular Characters". Herpetologica 57 (2): 233–245.
  • Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Callophis [sic] bibroni, pp. 425–426).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிப்ரான்_பவளப்பாம்பு&oldid=3645882" இலிருந்து மீள்விக்கப்பட்டது