உள்ளடக்கத்துக்குச் செல்

அம்னா மவாசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்னா மவாசு கான்Amna Mawaz Khan
தாய்மொழியில் பெயர்آمنہ مواز خان
பிறப்புஅம்னா மவாசு கான்
தேசியம்பாக்கித்தானியர்
பணிநடனக் கலைஞர், செயற்பாட்டாளர்
அறியப்படுவதுபரதநாட்டியம்

அம்னா மவாசு கான் (Amna Mawaz Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞராவார். நாடகக் கலைஞர், பெண்ணியவாதி மற்றும் அரசியல் வாதி என பன்முகங்களுடன் இவர் இயங்கினார். அம்னா மவாசு கான் பெண்கள் சனநாயக முன்னணியின் நிறுவன உறுப்பினரும் ஆவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

அம்னா ராவல்பிண்டியில் 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 அன்று பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை இசுலாமாபாத்தின் கல்தூனியா உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கலைகளில் இளங்கலை முடித்தார். இசுலாமாபாத்தில் உள்ள குவாயித் -இ-ஆசம் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வுக் கழகத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு பாக்கித்தான் ஆய்வுகளில் முதுகலைப் படிப்பு படித்தார்.[3]

பரதநாட்டியம்

[தொகு]

அம்னா கான் தனது 11 வது வயதில் மசுமூன்-இ-சௌக் [4] பள்ளியில் புகழ்பெற்ற நடனக் கலைஞர் இந்து மிதாவிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.[1][5] அதன் பிறகு 11 ஆண்டுகள் அவரிடம் நடனம் கற்றுக் கொண்டார். அம்னா கான் பின்னர் ஆறு ஆண்டுகள் தான் கற்றுக் கொண்ட பரதநாட்டியத்தை மாணவிகளுக்கு கற்பித்தார். மகால நடனம் மற்றும் நடனக் கலைகள் பாடத்தில் இங்கிலாந்தின் லண்டன், கிரீன்விச்சில் உள்ள டிரினிட்டி லாபன் கல்லூரியில் ஒரு குறுகிய கால பயிற்சியைப் பெற்றார்.[2][6]

2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை, அம்னா கான் இசுலாமாபாத்தில் உள்ள பாக்கித்தான் தேசிய கலை மன்றத்தில் நடன பயிற்றுவிப்பாளராகவும், நிரந்தர நடனக் குழுவின் தேசிய நடனக் குழுவின் தலைமை நடன இயக்குனராகவும் பணியாற்றினார்.[7] அரிய இந்த பரதநாட்டிய நடனத்தை நாட்டில் பாதுகாத்து, கலையை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளார்.[8][9]

அம்னா கான் கதக், உதய் சங்கரின் நடன பாணி மற்றும் பாக்கித்தானிய நாட்டுப்புற நடனங்களையும் கற்று ஆராய்ந்தார். நிகழ்ச்சிகள் கொடுத்தார். பயிற்சிப் பட்டறைகள் [10] நடத்தினார். அத்துடன் பாக்கித்தான் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் அமெரிக்கா,[11] சீனா, இந்தியா, சுவிச்சர்லாந்து மற்றும் ஐக்கிய ராஜ்யம் .[2] போன்ற நாடுகளிலும் இப்பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவில் வாழும் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரான தெக்ரீமா மிதாவுடன் (இந்து மிதாவின் மகள்) பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளார்.[12] அம்னா கான் தனது நடனத்தை பல கலைகள் மற்றும் இலக்கிய விழாக்களில் நிகழ்த்தியுள்ளார்.[13] போர்ட்லேண்ட் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட "அவ் சி மூவ்சு" என்ற ஆவணப்படத்தில் அம்னா கான் இடம்பெற்றார்.[14]

நாடகக் கலைஞர்

[தொகு]

அம்னா கான் ஓர் அமைதி மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் ஒரு பெண்ணியவாதியாவார்.[15] சோசலிச, முற்போக்கான கலைக் கூட்டான லால் அர்தாலை உருவாக்க இவர் உதவினார். மகளிர் அணிவகுப்புகள், மாணவர் அணிவகுப்புகள், கலை விழாக்கள் [16][17] மற்றும் ஃபைசு ஆமன் மேளா ஆகிய நிகழ்ச்சிகளில் லால் அர்தால் உறுப்பினர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் ஆடினார்.

அம்னா கான் பெரும்பாலும் பாக்கித்தான் தேசிய கலை மன்றத்தின் , தியேட்ரவல்லே மற்றும் குச் காசு ஆகியோரின் படைப்புத் தயாரிப்புகளில் பணியாற்றுகிறார்.[18][19][20]

மகதலேனா திட்டத்தில் அம்னா கான் உறுப்பினராக உள்ளார், பெண்கள் நாடகம் மற்றும் செயல்திறன் கலைகளின் குறுக்கு-கலாச்சார வலையமைப்பிற்கு இவ்வமைப்பு ஆதரவு மற்றும் பயிற்சியை வழங்குகிறது.[21] பெர்லினில் "பீபால் மற்றும் பேனியன்" என்ற கண்காட்சியை அம்னா ஏற்பாடு செய்தார், இதில் பாக்கித்தானின் சமகால கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றன.[22]

அரசியல்வாதி

[தொகு]

அம்னா கான் ஓர் இடதுசாரி அரசியல்வாதியாவார். சர்வாதிகாரத்தின் கீழ் விதிக்கப்பட்ட அவசரகாலத்தின் நடவடிக்கையின் போது, 2007 ஆம் ஆண்டில் இவரது அரசியல் செயல்பாடு தொடங்கியது, அப்போது இவர் ஒரு மாணவி. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மாணவர்களைத் திரட்டினார், எழுதினார், நடித்தார் மற்றும் தெரு நாடகங்களை இயக்கினார். அவாமி தொழிலாளர் கட்சியை நிறுவியபோது 2012 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தார். அப்போதிருந்து அம்னா கான் முற்போக்கான அரசியல் கைதிகள் மற்றும் வீட்டு உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள், மாணவர்கள், திருநங்கைகள், விவசாயிகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.[23] இசுலாமாபாத்தின் உள்ளாட்சித் தேர்தலில் 2015 ஆம் ஆண்டில் அவாமி தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளராக நின்றார். 2007 ஆம் ஆண்டு முதல், அரசியல் அமைப்பாளராகவும் பெண்ணியவாதியாகவும் பணியாற்றி வருகிறார்.

பெண்ணிய, சோசலிச அமைப்பான பெண்கள் சனநாயக முன்னணியின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளார்.[24]

2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இசுலாமாபாத்தில் "சமூக ரீதியாக கட்டப்பட்ட தடைகளை அடையாளம் காணுதல் மற்றும் சரிசெய்தல்" பற்றிய ஓர் உரையையும் வழங்கினார்.[23]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "LIVING COLOURS: ‘Future of classical dance, music in Pakistan is very bright’". https://www.dawn.com/news/1307859. Yasin, Aamir (12 January 2017). "LIVING COLOURS: 'Future of classical dance, music in Pakistan is very bright'". DAWN.COM.
  2. 2.0 2.1 2.2 "Freedom of Expression through Bharatanatyam Dance with Amna Mawaz with Q&A". Portland Dance Film Festival."Freedom of Expression through Bharatanatyam Dance with Amna Mawaz with Q&A". Portland Dance Film Festival.
  3. "Democracy, the Political and Social Movements in Europe and South Asia: An Intercontextual Dialogue" (PDF). German Academic Exchange Service (DAAD).
  4. "Mausikar arranges thrilling performance of dance and music". https://www.thenews.com.pk/print/85056-Mausikar-arranges-thrilling-performance-of-dance-and-music. 
  5. "Isabelle Anna’s story of kathak: There are no words here, just movement". https://tribune.com.pk/story/477001/isabelle-annas-story-of-kathak-there-are-no-words-here-just-movement. 
  6. "AMNA MAWAZ, DANCE PHOTOGRAPHY- PART 1". Behance (in english).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Dance day celebrated with a night of folk, classical performances". https://www.dawn.com/news/1479299. 
  8. "how she moves indu". www.tasmanianbutterco.com.au.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Tribute to classical dancer Indu Mitha". https://www.dawn.com/news/1537440. 
  10. Youlin, Magazine. "FACE Music Mela 2017: Promoting Diversity and Harmony through Music - Mirza Salam Ahmed - Youlin Magazine". www.youlinmagazine.com (in ஆங்கிலம்).
  11. "On Common Ground: From Pakistan to Portland". Sarika D. Mehta (in ஆங்கிலம்). 28 June 2017.
  12. "A tribute performance in honor of the dance guru Mrs. Mitha's 90th birthday - Mahnaz Shujrah - Youlin Magazine". www.youlinmagazine.com (in ஆங்கிலம்).
  13. "Music Mela Conference 2014". Vmag. 23 June 2014.
  14. "Freedom of Expression through Bharatanatyam Dance and Laban Techniques". Eventbrite (in அமெரிக்க ஆங்கிலம்).
  15. "Aman Ki Asha – India-Pakistan people's peace resolution: Throwing a pebble in the pond".
  16. "Schäm Dich!". schaemdi.ch.
  17. "Literature in the Capital". Newsline (in ஆங்கிலம்). 22 April 2017.
  18. "PechaKucha 20x20". www.pechakucha.com.
  19. "DanceWatch Weekly: The Risk/Reward bargain". Oregon ArtsWatch. 22 June 2017. Archived from the original on 23 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  20. "Bharatnatyam leaves many mesmerised in Pakistan". Deccan Herald (in ஆங்கிலம்). 16 October 2013.
  21. "Amna Mawaz Khan | The Magdalena Project - international network of women in theatre". themagdalenaproject.org.
  22. "Peepal and Banyan". THX AGAIN.
  23. 23.0 23.1 "TEDxIslamabad | TED". www.ted.com.
  24. "Amna Mawaz Khan | CreativeMornings/Islamabad". CreativeMornings (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்னா_மவாசு_கான்&oldid=3927161" இலிருந்து மீள்விக்கப்பட்டது