பயனர் பேச்சு:Tamil.lgbt

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Tamil.lgbt, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 21:12, 19 சூன் 2021 (UTC)[பதிலளி]

June 2021[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 19:18, 21 சூன் 2021 (UTC)[பதிலளி]

வணக்கம். ஆக்கநோக்கு என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? ஆங்கில விக்கிப்பீடியாவையே மொழி பெயர்க்கிறேன். நடுநிலையான கருத்துக்களையே சேர்க்கிறேன். தமிழில் பேசவே படாத பால் புதுமையினர் பற்றிய கட்டுரைகளை எழுதுவது என் விருப்பம். புதியவள் என்பதால் சில தவறுகள் இடம்பெறலாம். வேறு உள்நோக்கம் இருந்தாலோ அல்லது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலோ சுட்டிக்காட்டுங்கள். நன்றி.

விக்கிப்பீடியாவுக்கு வருகஎன வரவேற்கிறேன்! உங்கள் பங்களிப்புகளைத் தொடருங்கள். புதிதாகச் சேர்பவர்கள் பலருக்கும் இப்படியான சிறு சிக்கல்கள் முதலில் ஏற்படுவது வழக்கம்தான், கவலைப்படாதீர்கள். அதிகம் அறியப்படாத துறைகளில் நீங்கள் பங்களிக்க வந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களின் படைப்புகளால் விக்கிப்பீடியா பன்முகத்தன்மையோடு நல்ல வகையில் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 23:12, 26 சூன் 2021 (UTC)[பதிலளி]
@செல்வா: உங்கள் புரிதலுக்கு நன்றிகள். கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன். எந்த தவறான உள்நோக்கமும் இல்லை. ஆனால் நுழைந்தவுடனேயே பாகுபாடும் ஒடுக்குமுறையும். சலித்துவிட்டது. பேசாமல் ஒதுங்கிப்போவோமா என்று கூட நேற்று யோசித்தேன். என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை நரகம். அதை வாழ்ந்துபார்த்தால் தான் தெரியும். அந்த வேதனைகளை வெளியுலகுக்கு காட்ட ஒரு தளமாகவேனும் விக்கிப்பீடியாவை மாற்ற முயன்றால் காரணமின்றிய காழ்ப்பு. ஆனால் விக்கிப்பீடியாவில் எதிர்ப்பு இந்தளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை தான். உங்களைப் போன்றோரின் ஆதரவு ஓரளவு தெம்பைத் தருகிறது. அம்மண தேசத்தில் கோவணாண்டிகள் ஆகிவிட்டோம். ஒருநாள் எங்களையும் நிரூபிப்போம். நன்றியும் அன்பும். --Tamil.lgbt (பேச்சு) 08:34, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கிறது. //நீங்கள் எல்லோரும் பெண்களை மணப்பது வெறும் காமமாட மாத்திரம் தானா?//, //பாவம் உங்கள் மனைவிகள்.//, //நீங்கள் தலையிடாமல் உங்கள் சொந்த வணிகத்தைப் பார்த்துக்கொள்ளச் செல்லலாம்// இதுபோன்ற சொல்லாடல்கள் தேவையற்றவை. உரையாடும்போது, கட்டுரை சார்ந்த விடயத்துடன் மட்டும் உரையாடவும்.

சில வழிகாட்டல் குறிப்புக்கள்:

நிற்க: இங்கு நீங்கள் பக்கத்தை நகர்த்தியதும், அத்தலைப்பின்படி தொகுப்புச் செய்வதும் சிக்கல் மிக்கது. எனவே, அது பற்றி கருத்தினை நீங்கள் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் முன்வைக்கலாம். சிக்கல்மிக்க தலைப்புக்கள் விக்கி சமூக ஒப்புதல் பெற்ற பின்பே மாற்றப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். --AntanO (பேச்சு) 09:05, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எவ்வித முரணும் அற்ற வகையில் நான் கட்டுரையைத் திருத்திக்கொண்டிருந்த போது

//நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.// என்று திரு தாமோதரன் கோரியதோ, //தயவு செய்து இத்துடன் உங்கள் உரையாடலை நிறுத்திக் கொள்ளவும். நன்றி// என்று திரு கௌதம் சம்பத் கோரியதோ உங்களுக்கு தனிப்பட்ட தாக்குதலாகத் தெரியவில்லை. பெயரை மாற்ற முன்பே நான் உசாத்துணைகளுடன் செய்த திருத்தங்களை முன்னிலைப்படுத்தி விட்டு இங்கு வந்து என் பங்களிப்பு ஆக்கநோக்கில் இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டதும் தனிப்பட்ட தாக்குதலாக உங்களுக்கு தெரியவில்லை. ஏனெனில் பெயரிலேயே நான் யாரென்ற என் அடையாளத்தை கொண்டிருக்கிறேன். நன்று. நான் விக்கிப்பீடியாவிற்கு புதியவள். தங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த பதிவர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் முன்மாதிரியாக செயற்பட்டால் மகிழ்வேன். --Tamil.lgbt (பேச்சு) 11:07, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

Information icon Please refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; not for use as a forum or chat room. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. See here for more information. Thank you. AntanO (பேச்சு) 12:14, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

மேலே @AntanO: எடுத்துக்கூறியவை மிகவும் நல்ல வழிகாட்டல்கள். அருள்கூர்ந்து நன்முறையில் அவற்றை எடுத்துக்கொண்டு பங்களிக்க வேண்டுகின்றேன். உங்கள் பங்களிப்புகள் சிறப்பான திசையில் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகின்றேன். ஆனால் கலைக்களஞ்சியத்துக்கு ஆக்கம் தருகின்றோம், இதுகாறும் அதிகம் இல்லாத கருத்துகளைத் தக்க சான்றுகளோடு தமிழில் எழுதிப் பதிவிடுகின்றோம் என்று பங்களிக்க வேண்டுகின்றேன். அத்தலைப்புப் பொருள்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ போராடும் களமாக கருத வேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் அப்படி நினைத்திருக்காமல் இருக்கலாம், எனினும் அண்மைய உரையாடல்கள் சில இதனைச் சொல்லத் தூண்டுகின்றது. நான் உங்களின் நல்ல பங்களிப்புகளை எதிர்நோக்குகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:18, 27 சூன் 2021 (UTC)[பதிலளி]

வணக்கம்![தொகு]

உகவர், மாயிழை, திருநர், மிடையீரர் தொடர்பான உங்கள் பங்களிப்பு மகிழ்வளிக்கிறது. மேலும் தொடர வாழ்த்துக்கள். இது தொடர்பாக நான் செய்ய வேண்டும் என நினைப்பவை - அ) உடனடியாக ஒரு விக்கித்திட்டம் (பார்க்க: https://ta.wikipedia.org/s/3o7q) தொடங்கி இத்தலைப்பு சார்ந்து இதுவரை தமிழில் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்தல். ஆ) இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படாத முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்தல். இ) உரிய கலைச்சொற்களை பயன்படுத்துதல் ஈ) இறுதியாக ஒரு வலைவாசலை உருவாக்குதல் (பார்க்க: https://ta.wikipedia.org/s/39bn). வாருங்கள் சேர்ந்து பணியாற்றுவோம் -CXPathi (பேச்சு) 06:24, 7 செப்டம்பர் 2021 (UTC)

ஒரு உத்தேச பக்கம் இங்கு: https://ta.wikipedia.org/s/acwh CXPathi (பேச்சு) 08:27, 7 செப்டம்பர் 2021 (UTC)

பார்க்க: https://ta.wikipedia.org/s/4jln -CXPathi (பேச்சு) 07:57, 8 செப்டம்பர் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamil.lgbt&oldid=3275985" இலிருந்து மீள்விக்கப்பட்டது