உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லமலா காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லமலா காடு

நல்லமலா காடு (Nallamala Forest) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா[1] மாநிலங்களில் அமைந்துள்ளது. தென் இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இணையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் ஒரு பகுதியாக நல்லமலை காடு உள்ளது. கிருட்டிணா ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த மலைகள் வங்காள விரிகுடாவின் கோரமண்டல கடற்கரைக்கு இணையாக வடக்கிலிருந்து தெற்கே ஓடுகின்றன. இந்தக் காட்டின் மொத்த நீளம் 430 கிலோமீட்டர்களாகும். இதன் வடக்கு எல்லை பால்நாடு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் தெற்கு எல்லை திருப்பதி மலையிலும் உள்ளது. நல்லமலை மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 2900 அடிகள் முதல் 3600 அடிகள் வரை உயர்ந்துள்ளது.

புலிகள் காப்பகம்

[தொகு]

இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகமான நாகார்சுனசாகர்- சிறீசைலம் புலிகள் காப்பகம் நல்லமலை காட்டில் அமைந்துள்ளது. இப்புலிகள் காப்பகம் மட்டும் கர்நூல், பிரகாசம், குண்டூர், நல்கொண்டா மற்றும் மகபூப்நகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பரவியுள்ளது. புலிகள் காப்பகத்தின் மொத்த பரப்பளவு 3,728 சதுர கிமீ ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krishnamoorthy, Suresh (26 October 2014). "Nallamala forest, a delight for nature lovers". Hyderabad. http://www.thehindu.com/news/national/telangana/nallamala-forest-a-delight-for-nature-lovers/article6535479.ece. பார்த்த நாள்: 3 February 2016. 
  2. "Nallamala Range". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லமலா_காடு&oldid=3716227" இலிருந்து மீள்விக்கப்பட்டது