துருப கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருப கோசு
பிறப்பு1957
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு10 சூலை 2017
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிஇசைக்கலைஞர்
இசை ஆசிரியர்
ஆசிரியர்
அறியப்படுவதுசாரங்கி இசை
பெற்றோர்நிகில் கோசு
உஷா நயம்பள்ளி
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது

துருப கோசு (Dhruba Ghosh) (1957 - 2017))[1] மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும் சாரங்கிக் கலைஞருமாவார். [2]

சுயசரிதை[தொகு]

துருப கோசு 1957 இல் மும்பையில் பிறந்தார். கைம்முரசு தாள வாத்தியத்தில் புகழ்பெற்ற மேதையான இவரது தந்தை பத்ம பூசண் பண்டிட் நிகில் கோசு ஒரு பிரபல இசைக்கலைஞரும், ஆசிரியரும், எழுத்தாளருமாவார். [3] துருப கோசு, பிரபல புல்லாங்குழல் கலைஞரும், இசையமைப்பாளருமான பண்டிட் பன்னலால் கோசின் மருமகன் ஆவார்.[3] அனைத்திந்திய வானொலியின் தத்தரம் பார்வதகர், உஸ்தாத் அலி அக்பர் கான், உஸ்தாத் சாகிருதீன் கான் ஆகியோரிடமிருந்து சாரங்கியின் அடிப்படைகளை இவர் கற்றுக்கொண்டார். [4]பாடகர் பண்டிட் தின்கர் கைகினியின் வழிகாட்டுதலிலும் இவர் படித்தார். இவரது சகோதரர் நயன் கோசும் கைம்முரசு இசைக்கலைஞராவார்.[5] துருப கோசு மிகோ: ஜர்னி டு த மௌண்டைன் என்ற இசைத் தொகுப்பில் பணியாற்றினார். [6] இது கிராமி விருதை வென்றது.[4][6] இவர் பல்வேறு இணைவு இசைத் தொகுப்புகளிலும் பணியாற்றினார்.[3] பண்டிட் துருப கோசு 10 சூலை 2017 அன்று இந்தியாவின் மும்பையில் காலமானார். [7]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Soumya, Vajpayee Tiwari (11 July 2017). "Sarangi maestro Dhruba Ghosh dies of massive heart attack" (in en). mid-day (mid-day). https://www.mid-day.com/articles/sarangi-maestro-pandit-dhruba-ghosh-passes-away-dead-death-dies-heart-attack-mumbai-bollywood-news/18413151. பார்த்த நாள்: 5 May 2019. 
  2. 2.0 2.1 Akademi, Sangeet Natak. "Sangeet Natak Akademi Declares Fellowships (Akademi Ratna) and Akademi Awards (Akademi Puraskar) for the Year 2013". pib.nic.in. Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  3. 3.0 3.1 3.2 Rajan, Anjana (5 December 2013). "Music, medically speaking" (in en-IN). The Hindu (The Hindu). https://www.thehindu.com/features/friday-review/music/music-medically-speaking/article5426160.ece. பார்த்த நாள்: 5 May 2019. 
  4. 4.0 4.1 "Dhruba Ghosh [Delhi Gharana] | Artists-India Gallery". www.artists-india.com. www.artists-india.com. Archived from the original on 5 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  5. Jul 10, Bella Jaisinghani | Updated. "Dhrubajyoti Ghosh: Music world mourns the passing of sarangi player Dhrubajyoti Ghosh | Mumbai News - Times of India" (in en). The Times of India (The Times of India). https://timesofindia.indiatimes.com/city/mumbai/music-world-mourns-the-passing-of-sarangi-player-dhrubajyoti-ghosh/articleshow/59532870.cms. பார்த்த நாள்: 5 May 2019. 
  6. 6.0 6.1 Rinkita, Gurav. "Meet Mumbai's Grammy winner". archive.mid-day.com (archive.mid-day.com) இம் மூலத்தில் இருந்து 5 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505064617/https://archive.mid-day.com/news/2011/feb/160211-Sarangi-Pandit-Dhruba-Ghosh-Miho-Grammy-Awards.htm. பார்த்த நாள்: 5 May 2019. 
  7. 7.0 7.1 Angel, Romero. "Artist Profiles: Dhruba Ghosh | World Music Central.org". worldmusiccentral.org. worldmusiccentral.org. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருப_கோசு&oldid=3558823" இலிருந்து மீள்விக்கப்பட்டது