நயன் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட்
நயன் கோசு
சித்தார் கருவியை இசைக்கும் நயன் கோசு
பின்னணித் தகவல்கள்
பிறப்பு28 ஏப்ரல் 1956 (1956-04-28) (அகவை 67)
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர், இசையமைப்பாளர், ஆசிரியர்
இசைத்துறையில்1960– தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்சங்கீத மகாபாரதி
இணையதளம்www.nayanghosh.in/index.html

பண்டிட் நயன் கோசு (Pandit Nayan Ghosh)(பிறப்பு: ஏப்ரல் 28, 1956) ஓர் இந்திய கைம்முரசு இணைக் கலைஞரும், சித்தார் நிபுணருமாவார். [1]

நிகழ்த்துக் கலை[தொகு]

இந்திய இசைக் காட்சிகளில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்த இவர், 1956 ஆம் ஆண்டில் பிறந்தார். கைம்முரசு மற்றும் பின்னர் சித்தாரில் தனது மறைந்த தந்தை பத்மபூசண் பண்டிட் நிகில் கோசிடமிருந்து ஆழ்ந்த பயிற்சி பெற்றார். பின்னர், உஸ்தாத் அகமது ஜான் திரக்வா மற்றும் பண்டிட் ஞான பிரகாஷ் கோஷ் ஆகியோரின் கீழ் படித்தார். இவர் தனது தந்தை பண்டிட் நிகில் கோஷிடமிருந்து சிதார் மற்றும் குரலிசையிலும் பயிற்சி பெற்றார். பின்னர் பண்டிட் புத்ததேவ் தாசு குப்தாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.[2][3]

இவரது முதல் நிகழ்ச்சி 1960 இல் இவரது 4 வயதில் இருந்தது. [4] அதைத் தொடர்ந்து 1974 முதல் உலகம் முழுவதும், மதிப்புமிக்க இடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விரிவான இசை மற்றும் கற்பித்தல் நடைபெற்றது.

பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் விலாயத் கான், பண்டிட் நிகில் பானர்ஜி, பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் சிவ்குமார் சர்மா, உஸ்தாத் அம்ஜத் அலி கான், உஸ்தாத் ரைஸ் கான், பண்டிட் புத்ததேவ் தாஸ் குப்தா, உஸ்தாத் சலமத் அலிகான், உஸ்தாத் முன்னாவர் போன்ற பலரிடம் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[5]

இவர் தற்போது மும்பையில் உள்ள சங்கீத மகாபாரதியின் இயக்குநராகவும், மும்பை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) சிறப்பு விருந்தினர் பேராசிரியராகவும் உள்ளார். [6]

குடும்பம்[தொகு]

'வட இந்திய புல்லாங்குழலின் தந்தை' என்று பிரபலமாகக் கருதப்படும் பன்னாலால் கோசு இவரது மூத்த மாமாவார். [7][3] இவரது சகோதரர் பண்டிட் துருப கோசு ஒரு சாரங்கி கலைஞராவார். இவரது மகன் இசான் கோசுவும், ஒரு கைம்முரசு நிபுணராவார். [8]

விருதுகள்[தொகு]

இவர் ஏராளமான பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்; மும்பை சுர் சிங்கர் சம்சாத் வழங்கிய தால் மணி மற்றும் சுர் மணி ஆகியவை இதில் அடங்கும் (1985); அமெரிக்காவின் கலிபோர்னியாவின் துணை நிலை ஆளுநரால் வழங்கப்பட்ட சாதனை விருது; மற்றும் மும்பையின் சுவர சாதனா சமிதி வழங்கிய சுவர சாதனா ரத்னா (2013) போன்றவை. இந்துஸ்தானி கருவி இசையில் பங்களித்ததற்காக இவருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. 2.0 2.1 "CUR_TITLE". sangeetnatak.gov.in. Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  3. 3.0 3.1 https://ccrma.stanford.edu/~pchordia/nayan/
  4. "SudeepAudio.com - Nayan Ghosh, Instrumentalist, Mumbai, Indian music". www.sudeepaudio.com.
  5. https://www.nayanghosh.in/index.html
  6. https://www.nayanghosh.in/index.html
  7. "Nayan Ghosh". Shadaj.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. https://in.bookmyshow.com/person/ishaan-ghosh/1076829

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயன்_கோசு&oldid=3609541" இலிருந்து மீள்விக்கப்பட்டது