விசாகா அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகா அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டதுஅக்டோபர் 8, 1991
அமைவிடம்சின்ன வால்டியர், விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
உரிமையாளர்இந்திய அரசு

விசாகா அருங்காட்சியகம் (Visakha Museum) (முழுப்பெயர் : விசாகப்பட்டினம் மாநகர அருங்காட்சியகம்) என்பது இந்தியாவின் ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும். இங்கு காலிங்கந்திரா பகுதியின் வரலாற்றுப் புதையல்கள் மற்றும் கலைப்பொருட்களைக் காட்சிக்குக் கொண்டுள்ளன.[1] இந்திய அரசினால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தினை 1991ஆம் ஆண்டு அக்டோபர் 8 நாள் அப்போதைய ஆந்திர முதல்வர் என்.ஜனார்த்தனா ரெட்டி திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கான தொகுப்புகளில் பண்டைய ஆயுதங்கள், பீப்பாய்கள், நாணயங்கள், பட்டு உடைகள், நகைகள், போலி விலங்குகள், உருவப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், நாட்குறிப்புகள், படங்கள் செய்திகள் தாங்கிய புத்தகங்கள், காலச்சுவடுகள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இப்பகுதியில் ஆரம்பக்கால குடியேறியவர்களால் பயன்படுத்தப்பட்டவை. போர்க் கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பல மாதிரிகள் இங்கே காணப்படுகின்றன. பல்வேறு நாடுகளிடமிருந்து பரிசாகப் பெறப்பட்ட பல வரலாற்றுப் பொருட்களும் கண்காட்சியில் உள்ளன. இந்த அருங்காட்சியகம் ஒரு தேடுபொறி பிரதிபலிப்பான் 30 உதவியால் “இந்தியாவிற்கு வருகைதந்த வாஸ்கோ-டா-காமாவின் முதல் பயணத்தின் பாதை மற்றும் நேருவின் வார்த்தைகளான “நிலத்தில் பாதுகாப்பாக இருக்க, நாம் கடலில் உச்சமாக இருக்க வேண்டும்" என்பதைக் காணலாம்.[2]

மேலும் காண்க[தொகு]

  1. "about". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.
  2. "details". www.indiannavy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகா_அருங்காட்சியகம்&oldid=3045182" இலிருந்து மீள்விக்கப்பட்டது