கடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடிதம் (letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது.

கடிதம் எழுதுதல் என்கிற ஒரு பயன்பாடு, மொழியின் வளர்வு நிலைக்கும், உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கும் ஒரு சரியான ஊடகமாக இருக்கிறது, தொலைவில் இருக்கும் உறவுகளும், நட்புகளும் தொடர்பு கொள்ள இருந்த ஒரு மிகச் சரியான வழியாக இருந்து வந்த கடிதம் எழுதும் பழக்கம், தமிழ் மொழியியல் வரலாற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா என்கிற ஒரு கேள்வி எழுகிறது, தமிழ் மொழி வரலாற்றில் கடித இலக்கியம் என்கிற ஒரு தொடர்பு ஊடகம் பல்வேறு சூழல்களைக் கடந்து அரசியல் இயக்கங்கள் வரை தனது பங்களிப்பை செய்து இருக்கிறது, தந்தை பெரியார் முதல் கலைஞர் கருணாநிதி வரையில் கடிதங்கள் மூலம் தங்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சி இருக்கிறார்கள்.

கடிதம் எழுதுவதில் இருக்கும் ஒரு உணர்வு ரீதியிலான தொடர்பு நிலை, வேறு எந்த ஒரு தொழில் நுட்பக் கருவிக்கும் இல்லாத ஒரு சிறப்பு நிலையாகும், நமது கருத்துகளையும், உணர்வுகளையும் சரியான ஒரு திசையில் கொண்டு செல்வதற்கு கடிதம் சரியான தீர்வுகளைக் கொடுக்கும், மேலும், மொழி மேலாண்மைக்கும், இன்றைய இளைஞர்களின் இலக்கிய, இலக்கண அறிவு வளர்வுக்கும் கடிதம் எழுதும் முறை சிறப்பான ஒரு தீர்வாகும்.

கடிதம் எழுதும் ஒரு கலையை நமது இளையோர் மட்டுமின்றி, வேறுபாடின்றி அனைவரும் தொடர்ந்து நமது பண்பாட்டு அடையாளமாக இருக்கும் கடிதம் என்கிற ஒரு மொழியியல் ஊடக வளர்வுக்கு நம்மால் இயன்ற பணிகளைச் செய்வோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிதம்&oldid=1350322" இருந்து மீள்விக்கப்பட்டது