பேச்சு:வட்டுக்கோட்டை குருமடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Batticotta என்று அவர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பது வட்டுக்கோட்டை என்பதைத்தான். தமிழில் முதலெழுத்து வகரமாக மொழியப்படும் ஏராளமான சொற்கள் ஆங்கிலத்தின் B எழுத்தின் ஓசையிலேயே புழக்கத்திலுள்ளன. எனவே, இத்தலைப்பு வட்டுக்கோட்டை மதப்பள்ளி என்றிருப்பதே தகும்.--பாஹிம் (பேச்சு) 13:52, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பெயர் தானே! மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:20, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இது குறித்து இன்னும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 15:30, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
Seminary என்பது குருமடம், மதப்பள்ளி அல்ல. seminarist என்பது குருமடத்தில் படித்தவர். இவர் குருவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மேலும் parish house என்பது பங்குமனை என்றும் parish house என்பது குருமனை எனவும் தமிழில் வழங்குகிறது. யாழ் இறையியல் விரிவுரையாளரை ஒருவரை எனக்குத் தெரியும். அவரிடம் Batticotta என்பதை விசாரித்துப் பார்க்கிறேன். --AntonTalk 09:41, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
Seminary என்னும் சொல் புதிய மொழிபெயர்ப்பில் குருத்துவக் கல்லூரி எனக்கையாளப்பட்டுள்ளது. இங்கும் அச்சொல்லே பொருத்தமாக இருக்கும். மடம் என்னும் சொல் Monastery-ஐ குறிக்கப்பயன்படுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:11, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
விசாரித்ததில், பட்டிகோட்டா என்றே தமிழிலும் அழைக்கப்படுகிறது. பட்டிகோட்டா செமினறி என்றே உள்ளூர் வழக்கிலும் உள்ளது. காண்க இலங்கையில் Seminary என்பது குருமடம் என்றே அழைக்கப்படுகிறது. எ.கா: புனித வளனார் குருமடம், கண்டி தேசிய குருமடம் அல்லது அம்பிட்டிய தேசிய குருமடம் என்று அழைக்கப்படுகின்றன. , --AntonTalk 17:31, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
பட்டிகோட்டா செமினறி என்ற வழிமாற்றுடன் பட்டிகோட்டா குருமடம் என இருக்கலாம். --AntanO 02:45, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வட்டுக்கோட்டைச் செமினரி[தொகு]

பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அடிகளார் 1983 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் (நூல்) என்ற நூலில் வட்டுக்கோட்டைச் செமினரி என்றே எழுதியுள்ளார். எனவே அதனை வழிமாற்றாக வைத்து "வட்டுக்கோட்டைக் குருமடம்" என்று தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 04:35, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]