ஆண்டிஜன், நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டிஜன் (Andijan) என்பது உசுபெக்கிதானில் உள்ள ஒரு நகரமாகும். இது ஆண்டிஜன் பிராந்தியத்தின் நிர்வாக, பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது. கிர்கிஸ்தானுடனான உஸ்பெகிஸ்தானின் எல்லைக்கு அருகே பெர்கானா பள்ளத்தாக்கின் தென்கிழக்கு விளிம்பில் ஆண்டிஜன் அமைந்துள்ளது.

பெர்கானா பள்ளத்தாக்கின் பழமையான நகரங்களில் ஆண்டிஜன் ஒன்றாகும். நகரின் சில பகுதிகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். வரலாற்று ரீதியாக, ஆண்டிஜன் பட்டுப் பாதையில் ஒரு முக்கியமான நகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் பாபரின் பிறப்பிடமாகவும் அறியப்படுகிறது. பாபர்ர் தொடர்ச்சியான பின்னடைவுகளைத் தொடர்ந்து, தெற்காசியாவில் முகலாய வம்சத்திற்கு அடித்தளத்தை அமைப்பதில் வெற்றி பெற்று முதல் முகலாய பேரரசராக ஆனார். 2005 ஆம் ஆண்டில் அரசாங்கப் படைகள் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஆண்டிஜன் படுகொலை என்று அழைக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது.

சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் ஆண்டிஜன் ஒரு முக்கியமான தொழில்துறை நகரமாக உருவாக்கப்பட்டது. நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இரசாயனங்கள், உள்நாட்டு உபகரணங்கள், மின்னணுவியல், உணவுப் பொருட்கள், தளவாடங்கள், கலப்பை, விசையியக்கக் குழாய்கள், காலணிகள், விவசாய இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள், பல்வேறு பொறியியல் கருவிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஆகியவை அடங்கும் .

வரலாறு[தொகு]

பெயர் வரலாறு[தொகு]

நகரத்தின் பெயரின் தோற்றம் நிச்சயமற்றது. 10 ஆம் நூற்றாண்டின் அரபு புவியியலாளர்கள் ஆண்டிஜனை "அந்துகன்," அல்லது "ஆண்டிகன்" என்று குறிப்பிட்டுள்ளனர். [1] பாரம்பரிய விளக்கம் நகரத்தின் பெயரை துருக்கிய பழங்குடி பெயர்களான ஆண்டி மற்றும் ஆடோக் / ஆசோக் ஆகியவற்றுடன் இணைக்கிறது .

ஆரம்ப மற்றும் சமீபத்திய வரலாறு[தொகு]

பெர்கானா பள்ளத்தாக்கின் பழமையான நகரங்களில் ஆண்டிஜனும் ஒன்றாகும். கி.மு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளின் செழிப்பான மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட 70 க்கும் மேற்பட்ட நகரங்களைக் கொண்ட தாவன் (பார்கானா) மாநிலத்தின் தலைநகரான எர்சியின் இடிபாடுகள் உள்ள நகரமாகும். நகரின் சில பகுதிகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். வரலாற்று ரீதியாக, ஆண்டிஜன் பட்டுப் பாதையில் ஒரு முக்கியமான நகரமாக இருந்துள்ளது.

இந்த நகரம் பாபரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது. அவர் தொடர்ச்சியான பின்னடைவுகளைத் தொடர்ந்து, முகலாய வம்சத்திற்கு அடித்தளம் அமைப்பதில் வெற்றிபெற்று முதல் முகலாய பேரரசராக ஆனார். [2]

18 ஆம் நூற்றாண்டில் கோகாண்டின் கானேட் உருவாக்கப்பட்ட பின்னர், தலைநகரம் ஆண்டிஜனிலிருந்து கோகாண்டிற்கு மாற்றப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், உருசிய பேரரசு இன்றைய மத்திய ஆசியாவின் பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 1876 ஆம் ஆண்டில், உருசியர்கள் கோகாண்டின் கானேட் மற்றும் ஆண்டிஜன் நகரத்தை கைப்பற்றினர்.

1898 ஆம் ஆண்டின் ஆண்டிஜன் எழுச்சியின் மையமாகவும், முக்கிய இடமாகவும் ஆண்டிஜன் இருந்தது, இதில் சூபி மதத் தலைவர் மதாலி இசானின் ஆதரவாளர்கள் நகரத்தில் உள்ள உருசிய படையினர் தங்கும் இடத்தைத் தாக்கி, 22 பேரைக் கொன்றனர். மேலும் 16லிருந்து 20 பேர் வரை காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இதில் பங்கேற்றவர்களில் 18 பேர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் 360 பேர் நாடு கடத்தப்பட்டனர். [3]

1902 டிசம்பர் 16,அ ன்று, கடுமையான பூகம்பத்தால் நகரத்தின் பெரும்பகுதி தரைபட்டமானது.இதனால் பிராந்தியத்தில் 30,000 வீடுகள் அழிந்தன. மேலும் ,500 குடியிருப்பாளர்கள் இறந்துபோயினர்.[4] 1917 இல் ஆண்டிஜாில் சோவியத் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர், இந்த நகரம் விரைவாக உசுபெக் சோவியத் சோசலிச குடியரசில் ஒரு முக்கியமான தொழில்துறை நகரமாக மாறியது.

நவீன வரலாறு[தொகு]

2005 படுகொலை நடந்த நவோய் சதுக்கத்தின் காட்சி

குறிப்புகள்[தொகு]

  1. Pospelov, E. M. (1998). Geographical Names of the World. Toponymic Dictionary. Russkie slovari. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-89216-029-7. 
  2. Manz, Beatrice Forbes (1987). "Central Asian Uprisings in the Nineteenth Century: Ferghana under the Russians". Russian Review 46 (3): 267–281. doi:10.2307/130563. https://archive.org/details/sim_russian-review_1987-07_46_3/page/267. 
  3. Khalid, Adeeb (1998). The Politics of Muslim Cultural Reform: Jadidism in Central Asia. Comparative studies on Muslim societies. Berkeley: University of California Press. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-21355-6. https://archive.org/details/politicsofmuslim0000khal. 
  4. Kislov, D.. "Paging through old journals: Evidence of the 1902 Andijan Earthquake". 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andijan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிஜன்,_நகரம்&oldid=3581255" இலிருந்து மீள்விக்கப்பட்டது