தயோபாசுபோரைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோபாசுபோரைல் குளோரைடு
Thiophosphoryl chloride
Structural formula of thiophosphoryl chloride
Ball-and-stick model of thiophosphoryl chloride
Ball-and-stick model of thiophosphoryl chloride
Space-filling model of thiophosphoryl chloride
Space-filling model of thiophosphoryl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபோதையாயிக் டிரைகுளோரைடு
வேறு பெயர்கள்
தயோபாசுபோரைல் குளோரைடு, பாசுபரசு சல்போகுளோரைடு, பாசுபரசு(V) சல்போகுளோரைடு
இனங்காட்டிகள்
3982-91-0 N
ChemSpider 18729 Y
InChI
  • InChI=1S/Cl3PS/c1-4(2,3)5 Y
    Key: WQYSXVGEZYESBR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cl3PS/c1-4(2,3)5
    Key: WQYSXVGEZYESBR-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19883
SMILES
  • P(=S)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl3PS
வாய்ப்பாட்டு எடை 169.4 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.67 கி/செ.மீ3
உருகுநிலை −35 °C (−31 °F; 238 K)
கொதிநிலை 125 °C (257 °F; 398 K)
வினைபுரியும்
கரைதிறன் பென்சீன், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு [கார்பன் டெட்ராகுளோரைடு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீவிர நீராற்பகுப்பு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் மக்னீசியம் குளோரைடு MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயோபாசுபோரைல் குளோரைடு (Thiophosphoryl chloride) என்பது PSCl3.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் கார நெடியைக் கொண்டுள்ளது. ஈரக்காற்றில் புகையும் தன்மையுடையது. பாசுபரசு குளோரைடிலிருந்து தயோபாசுபோரைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கத் தேவைப்படும் தயோபாசுபோரைலேட்டு வகை கரிமச்சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது,

தயாரிப்பு[தொகு]

தயோபாசுபோரைல் குளோரைடை பல்வேறு வகையான வினைகளின் வழியாகத் தயாரிக்க இயலும். பாசுபரசு முக்குளோரைடிலிருந்து தயாரிக்கும் முறையே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் பாசுபரசு முக்குளோரைடை நேரடியாக அதிகப்படியான கந்தகத்துடன் சேர்த்து 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினை புரியச்செய்து தயாரிக்கிறார்கள்[2]

PCl3 + S → PSCl3

இம்முறையைப் பயன்படுத்துவதால் அதிக அளவு தயோபாசுபோரைல் குளோரைடு உருவாகிறது. காய்ச்சிவடித்தல் முறையில் இதை தூய்மையாக்கி பயன்படுத்தலாம். [[வினையூக்கி[[கள் மூலம் வினையை நிகழ்த்தினால் குறைந்த வெப்பநிலையில் விளைபொருளை உருவாக்க இயலும் என்றாலும் இது அவசியமாகக் கருதப்படுவதில்லை. பாசுபரசு பெண்டாசல்பைடுடன் பாசுபரசு பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் மாற்றுவழி முறையில் இதைத் தயாரிக்கலாம்.[3]

3 PCl5 + P2S5 → 5 PSCl3.

வினைகள்[தொகு]

பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு போன்றவற்றில் தயோபாசுபோரைல் குளோரைடு கரையும்[1].இருப்பினும், ஆல்க்கால்கள், அமீன்கள் போன்ற ஐதராக்சில் கொண்ட அல்லது காரக் கரைசல்களுடன் சேர்க்கப்படும் போது விரைவாக நீராற்பகுப்பு அடைந்து தயோபாசுபேட்டுகளை உருவாக்குகிறது[2] PSCl3 தண்ணீருடன் வினைபுரிந்து பாசுபாரிக் அமிலம், ஐதரசன் சல்பைடு அல்லது டைகுளோரோதயோபாசுபாரிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம் போன்றவற்றைக் கொடுக்கிறது[4]

PSCl3 + 4 H2O → H3PO4 + H2S + 3 HCl
PSCl3 + H2O → HOP(S)Cl2 + HCl

தயோபாசுபோரைலேட்டுடன் சேர்க்க PSCl3 பயன்படுகிறது. அல்லது P=S கரிமச் சேர்மங்களுடன் சேர்க்கப் பயனாகிறது.[2]. இத்தகைய மாற்ற வினைகள் பரவலாக அமீன்களுக்கும் ஆல்ககால்களுக்கும் பொருந்திவருகின்றன. இதேபோல அமினோ ஆல்ககால்கள், டையால்கள், டையமீன்கள் போன்ற சேர்மங்களுக்கும் இத்தகைய மாற்ற வினைகள் பொருந்துகின்றன.[1]. தொழிற்சாலைகளில் பாராதயோன் போன்ற பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க PSCl3 சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[4]

PSCl3 + 2 C2H5OH → (C2H5O)2PSCl + 2 HCl
(C2H5O)2PSCl + NaOC6H4NO2 → (C2H5O)2PSOC6H4NO2 + NaCl

மூவிணைய அமைடுகளுடன் PSCl3 வினைபுரிந்து தயோ அமைடுகளை உருவாக்குகிறது.[1]. உதாரணமாக,

C6H5C(O)N(CH3)2 + PSCl3 → C6H5C(S)N(CH3)2 + POCl3

மெத்தில்மெக்னீசியம் அயோடைடுடன் தயோபாசுபோரைல் குளோரைடு வினைபுரிந்து டெட்ராமெத்தில்டைபாசுபீன் டைசல்பைடு ([Me2P(S)] சேர்மத்தை உருவாக்குகிறது.2.[5],

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Spilling, C. D. "Thiophosphoryl Chloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis John Wiley & Sons, Weinheim, 2001. எஆசு:10.1002/047084289X.rt104 10.1002/047084289X.rt104. Article Online Posting Date: April 15, 2001.
  2. 2.0 2.1 2.2 "Phosphorus Compounds, Inorganic". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. (2005). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a19_527. .
  3. Martin, D. R.; Duvall, W. M. “Phosphorus(V) Sulfochloride” Inorganic Syntheses, 1953, Volume IV, p73. எஆசு:10.1002/9780470132357.ch24 10.1002/9780470132357.ch24.
  4. 4.0 4.1 Fee, D. C.; Gard, D. R.; Yang, C. “Phosphorus Compounds” Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. John Wiley & Sons: New York, 2005. எஆசு:10.1002/0471238961.16081519060505.a01.pub2 10.1002/0471238961.16081519060505.a01.pub2
  5. G. W. Parshall "Tetramethylbiphosphine Disulfide" Org. Synth. 1965, volume 45, p. 102. எஆசு:10.15227/orgsyn.045.0102
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோபாசுபோரைல்_குளோரைடு&oldid=2699126" இலிருந்து மீள்விக்கப்பட்டது