கிழக்கு திரேசு
கிழக்கு திரேசு, (East Thrace, Eastern Thrace (துருக்கியம்: Doğu Trakya, அல்லது திராக்கியா; (Trakya, கிரேக்க மொழி: Ανατολική Θράκη, Anatoliki Thraki; பல்கேரிய: Източна Тракия, Iztochna Trakiya), தென் ஐரோப்பாவிலுள்ள, திரேசு புவியியற் பகுதியின் கிழக்கிலுள்ள, தற்கால துருக்கி குடியரசின் அங்கமாகும். இது துருக்கிய திரேசு எனவும் ஐரோப்பிய துருக்கி எனவும் அறியப்படுகின்றது. துருக்கியின் நிலப்பரப்பில் 3% உள்ள இப்பகுதியில் துருக்கியின் 14% மக்கள்தொகை உள்ளது.[1] துருக்கியின் மற்ற பகுதிகள் புவியியல்படி தென்மேற்கு ஆசியாவிலுள்ள அனத்தோலியாவில் உள்ளன. கிழக்கு திரேசு கடல் வணிகப் போக்குவரத்து மிக்கப் பகுதியில் உள்ளதால் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள இரு குறுகலான நீரிணைகள் நடுநிலக்கடலையும் கருங்கடலையும் இணைக்கின்றன. இதனால் உருசியா, உக்ரைன், உருமேனியா, பல்காரியா, சியார்சியா நாட்டுக் கடற்படைகளுக்கு அணுக்கம் வழங்குவதால் போர்நிலை முதன்மையும் பெறுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zdanowski, Jerzy (2014). Middle Eastern Societies in the 20th Century. Cambridge Scholars Publishing. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1443869591.