பல்லவர் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவரின் சிங்கக் கொடி

பல்லவர் கொடி என்பது தமிழகத்தின் பல்லவப் பேரரசின் கொடியாகும். பல்லவ அரச சின்னம் சிங்கம் மற்றும் நந்தி ஆகும், இது மாறக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு பல்லவ மன்னனுக்கும் சொந்தமாக ஒரு பதாகை இருந்தது. எடுத்துக்காட்டாக, இரண்டாம் நரசிம்ம பல்லவன் சிங்கத்தை அவரது சின்னமாகப் பயன்படுத்தினார், இரண்டாம் நந்திவர்மன் நந்தியை விரும்பினார். முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சியின்போது பல்லவ சின்னமாக கட்வங்கம் இருந்தது.[1] சிங்கத்திலும் பல வகையான சிங்கங்களை பல்லவர்கள் அமைத்தனர், காஞ்சி புரத்தை ஆண்ட முதன்மையான பல்லவ மன்னர் பெயர்கள் சிம்ம சென்ற சொல்லை உடையதாக இருந்தன (சிம்மவர்மன் I, சிம்மவிஷ்ணு, முதலாம் நரசிம்ம பல்லவன்...). சிம்ம வரிசை வாரிசுகள் சிங்கச் சின்னத்தைக் கொண்டவர்களாக இருந்தனர்.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. Rajalakshmi (Ph. D.), Tamil Polity, p50
  2. S. Chattopadhyaya, Some early dynasties of South India, 1974
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவர்_கொடி&oldid=2441703" இலிருந்து மீள்விக்கப்பட்டது