டி. பி. ஏழுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. பி. ஏழுமலை (T. P. Elumalai) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 1952 தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் டி. பி. ஏழுமலையை அடுத்து இரண்டாம் இடத்தைப் பெற்றவர் என். இராமகிருஷ்ண ஐயர்.[1]

இவர் 1957, 1962 ஆகிய தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

1957 தேர்தலில் வெற்றி பெற்ற இருவரில் இவர் ஒருவர். மற்றவர் வி. கோவிந்தசாமி நாயுடு ஆவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._ஏழுமலை&oldid=3498987" இலிருந்து மீள்விக்கப்பட்டது