பேச்சு:ஆவி ஒடுக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை முழுவதுமாகத் திருத்தி எழுதப்பட்ட வேண்டும். condensation என்பதற்கு குளிர்வித்தல் என்ற சொல் சரியானதா?--Kanags \உரையாடுக 04:19, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]


Kanags, இப்படி இருந்தால் சரியாக இருக்குமா?

ஆவி ஒடுக்கம் அல்லது ஆவி சுருக்கம் (Condensation) என்பது வாயு நிலையில் உள்ள பருப்பொருள் திரவ நிலைக்கு மாறும் செயலைக் குறிக்கும். ஆவியாதல் செயல்முறைக்கு தலைகீழாக இந்நிகழ்வு இருப்பதால் இதை ஆவி சுருக்கம் அல்லது ஆவி ஒடுக்கம் என்று அழைக்கலாம். பெரும்பாலும் இந்நிலை மாற்றம் தண்ணீர் சுழற்சியில் நிகழ்கிறது.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஒடுங்குதல் என்பது இலங்கை வழக்கு. தமிழக வழக்கை அறியத் தர முடியுமா? நீராவியாகுதல் என்பது சற்றும் பொருத்தமற்றது. கருத்தே மாறுபடுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:04, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன் நீராவியாகுதல் தவறானது ஆகும். ஆவி சுருக்கம் அல்லது ஆவி இறக்கம் பொருத்தமாக இருக்கும்.--கி.மூர்த்தி 05:37, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆவி ஒடுக்கம் சிறந்ததாக உள்ளது.--Kanags \உரையாடுக 05:47, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அடரூட்டல்[தொகு]

Condensation என்ற சொல்லுக்கு இணையாக நாம் 'அடரூட்டல்' என்ற சொல்லை எடுத்தாளலாம் என்று எண்ணுகிறேன். காரணம்

           Condense என்ற சொல்லை பிரித்தால் 'com+dense' என்று பிரிந்து பொருள் தரும்.

இதில் உள்ள com என்ற சொல்லானது ஒரு முன்னொட்டு ஆகும்.இதற்கான பொருள் 'உடன் இருத்தல்'என்பதாகும்,dense என்றால் அடர்த்தி ஆகும். Condense - அடரூட்டு Condensation - அடரூட்டல் Condenser - அடரூட்டி Condensate - அடர்மம்

                                                      நன்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆவி_ஒடுக்கம்&oldid=2136116" இலிருந்து மீள்விக்கப்பட்டது