சாய்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்ராங்
Sairang
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்அய்சால்
ஏற்றம்210 m (690 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,036
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மிசோ
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

சாய்ராங் (Sairang) என்பது இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் அய்சால் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

23.8°வடக்கு மற்றும் 92.67°கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் சாய்ராங் நகரம் பரவியுள்ளது. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 210 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] சாய்ராங் நகரின் மொத்த மக்கள் தொகை 5,036 ஆகும். இம்மக்கள் தொகையில் 56% பேர் ஆண்கள் மற்றும் 44% பேர் பெண்கள் ஆவர். சாய்ராங் நகரின் கல்வியறிவு சதவீதம் 82% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 85% எண்னிக்கையும் பெண்கள் 77% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 15% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

தொடருந்துப் போக்குவரத்து[தொகு]

மிசோரம் மாநிலத்தின் ஒரு முக்கியமான தொடருந்து முனையமாகத் திகழும் பைராபி நகரம் இந்நகருக்கு அருகாமையில் உள்ளது. பைராபி நகரம் அகன்ற வழிப்பாதை போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நகரமாகும். பைராபியில் இருந்து சாய்ராங் வரையிலான இருப்புப் பாதை திட்டம் தற்பொழுது அமைக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. [3] அசாம் மாநிலத்தில் இருந்து வரும் தேசிய நெடுஞ்சாலை 54 சாய்ராங் நகரை பல முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Sairang
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. Sanctioned in 2000, broad-gauge train reaches Mizoram after 16 years Indian Express, Retrieved 21 March, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ராங்&oldid=3575232" இலிருந்து மீள்விக்கப்பட்டது