ராம் கிருபாள் யாதவ்
Appearance
ராம் கிருபால் யாதவ் | |
---|---|
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் | |
பதவியில் 9 நவம்பர் 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
பின்னவர் | நிரஞ்சன் ஜோதி |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | ரஞ்சன் பிரசாத் யாதவ் |
தொகுதி | பாடலிபுத்ரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்னா, பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இராச்டிரிய ஜனதா தளம் (2014 வரை) |
துணைவர் | கிரண் தேவி |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | பட்னா |
முன்னாள் கல்லூரி | மகது பல்கலைக்கழகம் இளங்கலை, இளங்கலைச் சட்டம் |
ராம் கிரிபால் யாதவ் (Ram Kripal Yadav)(பிறப்பு: அக்டோபர் 12, 1957) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகாரில் உள்ள பாடலிபுத்ரா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 17வது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகவும், லாலு யாதவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.[3][4][5] பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6][7][8] இவர் முதலில் பீகாரில் பாட்னா மாநகர தந்தையாகவும், பின்னர் 2014 முதல் 2019 வரை மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.[9][10]
கல்வி
[தொகு]யாதவ் 12 நவம்பர் 1957-ல் பிறந்தார். இவர் பாட்னாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் இளங்கலை சட்டப் பட்டங்களைப் பெற்றார்.[11]
பதவிகள்
[தொகு]- 1985-1986 :- துணை மேயர், பாட்னா மாநகராட்சி
- 1992-1993 :- உறுப்பினர், பீகார் சட்ட மேலவை
- 1993-1996 :- 10வது மக்களவைக்கு தேர்வு (இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்)
- 1996-1997 :- 11வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (2வது முறை)
- 1998-2004 :- உறுப்பினர், பீகார் சட்ட மேலவை
- 1998-2005 :- தலைவர், பீகார் தர்மிக் நயாஸ் பரிஷத் (பீகார் அரசின் மாநில அமைச்சருக்கு இணையான பதவி)
- 2004-2009 :- 14வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (3வது முறை)
- உறுப்பினர், தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குழு
- 5 ஆகஸ்ட் 2007 :- உறுப்பினர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மீதான நிலைக்குழு
- 1 மே 2008 :- உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு
- 2010 - 16 மே 2014 :- மாநிலங்களவைக்கு தேர்வு
- 2010 :- உறுப்பினர், பாதுகாப்புக் குழு
- 2010 :- உறுப்பினர், நிலக்கரி அமைச்சகம் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு
- தலைவர் :- டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மற்றும் கலாச்சார நிறுவனம், பீகார்
- 2014-2019 :- 16வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (4வது முறை)
- 14 ஆகஸ்ட் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், மதிப்பீடுகளுக்கான குழு
- 1 செப்டம்பர் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் மீதான நிலைக்குழு
- 1 செப்டம்பர் 2014 - 9 நவம்பர் 2014 :- உறுப்பினர், ஆலோசனைக் குழு, ரயில்வே அமைச்சகம்
- 9 நவம்பர் 2014 - 5 ஜூலை 2016 :- மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் இணை அமைச்சர்[12]
- 5 ஜூலை 2016 - 25 மே 2019 :- மத்திய ஊரகத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர்[13]
- மே 2019 :- 17வது மக்களவைக்கு மீண்டும் தேர்வு (5வது முறை)[14]
- 24 ஜூலை 2019 முதல் :- உறுப்பினர், பொதுக் கணக்குக் குழு
- 13 செப்டம்பர் 2019 முதல் :- உறுப்பினர், விவசாய நிலைக்குழு
- 9 அக்டோபர் 2019 முதல் :- உறுப்பினர், துணைச் சட்டத்திற்கான குழு
- 9 அக்டோபர் 2019 முதல் :- உறுப்பினர், ஆலோசனைக் குழு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
சான்றுகள்
[தொகு]- ↑ "Pataliputra Election result 2019: RJD's Misa Bharti trailed as BJP's Ram Kripal Yadav won by 39321 votes". Times Now News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
- ↑ "Lok Sabha elections 2019: Misa Bharti vs Ram Kripal Yadav in Pataliputra". The Telegraph (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-23.
- ↑ "Lalu Prasad loyalist Ram Kripal Yadav joins BJP". India.Com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
- ↑ "All you need to know about Ram Kripal Yadav, the former Lalu loyalist". Firstpost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
- ↑ "Ram Kripal Yadav - Lalu's disciple now PM Narendra Modi loyalist". Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-11-09.
- ↑ "Rebel RJD MP Ram Kripal Yadav joins BJP". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
- ↑ "Ram Kripal Yadav joins BJP". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
- ↑ "Ram Kripal Yadav joins BJP". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
- ↑ "Ram Kripal Yadav MP demands government to set up new industries in Bihar". Etv Bharat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
- ↑ "Lok Sabha Election 2019: सुबह-सुबह राजधानी की सड़कों पर ई-रिक्शा चलाते दिखे केंद्रीय मंत्री, लोग देखकर रह गए दंग". Jansatta (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
- ↑ "Yadav, Shri Ram Kripal". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
- ↑ "Union minister Ram Kripal Yadav drives e-rickshaw, leaves". Business Standard (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
- ↑ "Union minister Ram Kripal Yadav drives e-rickshaw, leaves Patna residents bemused". News Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
- ↑ "Seventeenth Lok Sabha Members Bioprofile". Lok Sabha (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.