கந்தசாமி கமலேந்திரன்
க. கமலேந்திரன் K. Kamalendran | |
---|---|
1வது வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 2013 – 2014 | |
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் அக்டோபர் 2013 – 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
இனம் | இலங்கைத் தமிழர் |
கந்தசாமி கமலேந்திரன் (Kandasamy Kamalendran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் ஆவார்.
அரசியலில்
[தொகு]கமலேந்திரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் 13,632 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் மாதத்தில் இலங்கை அரசுத்தலைவரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கொலைக்குற்றச்சாட்டு ஒன்றின் காரணமாக மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து 2014 ஆம் ஆன்டில் நீக்கப்பட்டார்.
கொலைக் குற்றச்சாட்டு
[தொகு]நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சின் என்பவரைப் படுகொலை செய்தாரென்ற சந்தேகத்தின் பேரில் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் 2013 டிசம்பர் 3 ஆம் நாள் கொழும்பில் கைது செய்தனர்.[3] நெடுந்தீவு பிரதேச சபை தலைவரான டானியல் ரெக்சின் (44) 2013 நவம்பர் 26ம் திகதி புங்குடுதீவிலுள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 9 மிமீ கைத்துப்பாக்கி மற்றும் 11 ரவைகளும் கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்டன.[4] கமலேந்திரன் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் ஈழ மக்கள் சனநாயகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[5][6] ஆனாலும், வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.[7] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இவரை 2014 மார்ச் மாதத்தில் கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தது.[8] 2014 ஆகத்து 29 இல் இவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.[9] ஆனாலும், கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு எவரும் வராத காரணத்தால், அவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2013.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் உட்பட மூவர் கைது[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், டிசம்பர் 5, 2013
- ↑ K.Kamalendran, EPDP Stalwart & Opposition Leader arrested and remanded, ஏசியன் ட்ரிபியூன், டிசம்பர் 5, 2013
- ↑ "ஈ.பி.டி.பி. கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்". வீரகேசரி. 3 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Kamalendran suspended from EPDP பரணிடப்பட்டது 2013-12-09 at the வந்தவழி இயந்திரம், சிலோன் டுடே, டிசம்பர் 5, 2013
- ↑ "கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு! சபை அமர்வில் கலந்து கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி". தமிழ்வின். 6 பெப்ரவரி 2014. Archived from the original on 2014-04-17. பார்க்கப்பட்ட நாள் 6-02-2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஐ.ம.சுதந்திர முன்னணியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்". தமிழ்வின். 11 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "கந்தசாமி கமலேந்திரன் பிணையில் விடுதலை". தினகரன். 30 ஆகத்து 2014. Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 30-06-2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ கமலேந்திரனை பிணையில் எடுக்க எவரும் இல்லை: விளக்கமறியல் நீடிப்பு பரணிடப்பட்டது 2020-09-21 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், செப்டம்பர் 3, 2014