உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்மான்செக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒப்மான்செக்
(Hoffmannsegg)
Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg
பிறப்பு(1766-08-23)23 ஆகத்து 1766
டெரசுடென், செருமனி
இறப்பு13 திசம்பர் 1849(1849-12-13) (அகவை 83)
டெரசுடென், செருமனி
குடியுரிமைசெருமானியன்
தேசியம்செருமன்
துறைஉயிரியல்
அறியப்படுவதுகுடும்பம் (உயிரியல்)
தாக்கம் 
செலுத்தியோர்
இல்லிகெர்

ஒப்மான்செக் (Johann Centurius Hoffmann Graf von Hoffmannsegg, ஆகத்து 23, 1766 – திசம்பர் 13, 1849) செருமன் நாட்டு தாவரவியல் அறிஞர். தாவரவியலில் அவரது ஆராய்ச்சிகள், Hoffmanns என்று சுருக்கமாக அடையாளமிடப்படுகின்றன.[1]

தாவரவியலாளராக இருந்தாலும், பூச்சியியலும், பறவையியலிலும் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர் டெரசுடன் (Dresden) நகரில் பிறந்தார். லைப்சிக் (Leipzig) நகரிலும், கொட்டின்சென் (Göttingen) நகரிலும் கல்வி கற்றார்.

ஆராய்ச்சிகள்

[தொகு]

ஐரோப்பாவின் பல இடங்களுக்கும் சென்று, ஆராய்ந்து பல தாவரங்களையும், விலங்குகளையும் சேகரித்தார். அதற்காக 17951796 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாட்களில், அங்கேரி, ஆசுத்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஆராய்ச்சிப் பயணம் செய்தார். பின்னர் போர்த்துகல் நாட்டில், 1797 முதல்1801 வரையிலான 5 ஆண்டுகளில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார்.

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Hoffmannsegg, Johann Centurius என்பவரை, Hoffmanns. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[2]

சாதனைகள்

[தொகு]

அப்பயண சேகரிப்புகளை, பருன்சுவிக் நகரில் இருந்த இல்லிகெர் என்ற அறிஞருக்கு அனுப்பினார். அதன் மூலம் தனது ஆராய்ச்சியை முழுமையடைய செய்தார். பெர்லின் நகரில், 1804 முதல் 1816 வரையிலான 13 ஆண்டுகளுக்கு பணி புரிந்தார். பெர்லின் நகரின் விலங்கியல் அருங்காட்சியகத்தை, 1809 ஆம் ஆண்டு நிறுவினார். 1815 ஆம் ஆண்டு, அந்நகரின் அறிவியல் பேரவையால் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இல்லிகெர் என்ற அறிஞரை ஆம் ஆண்டு, அருங்காட்சியகக் காப்பாளராக்க முன்மொழிந்தார். அதன் பின்பு, இல்லிகெர்க்கு ஆராயக் கொடுத்த, ஆப்மான்செக்கின் பயணச் சேகரிப்புகள், புருன்சுவிக் நகரிலிருந்து பெர்லினுக்கு மாற்றப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. International Plant Names Index(IPNI) - Hoffmanns
  2. IPNI,  Hoffmannsegg, Johann Centurius {{citation}}: Invalid |mode=CS1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்மான்செக்&oldid=3603844" இலிருந்து மீள்விக்கப்பட்டது