பேச்சு:வ. ந. கிரிதரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணல்தொட்டியில் இடப்பட்ட தகவல்கள் இங்கு இடப்பட்டுள்ளது. --Natkeeran 15:04, 20 ஏப்ரல் 2006 (UTC)

அனைத்துப் பயனர்களின் கவனத்துக்கு[தொகு]

இது எழுத்தாளர் ஒருவர் பற்றிய கட்டுரை. கட்டுரைப் பொருளாக அமைந்துள்ள ஒருவரை நோக்கிய கேள்விகளை அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் சேர்க்க முடியாது. தவிரவும் விக்கிபீடியாவின் பயனர் ஒருவர் பற்றி அவருடைய பங்களிப்புடன் கட்டுரை ஒன்று இருக்கலாமா? அது முறையாக இருக்குமா? என்பது பற்றி எனக்கு ஐயம் உண்டு. கிரிதரன் என்னுடைய நண்பர். பல ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். அவருடைய தகுதிபற்றி எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனாலும் விக்கிபீடியா போன்ற வளர்ந்து வரும் திட்டங்களில் முன்னுதாரணங்களை உருவாக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். பயனர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். Mayooranathan 18:29, 20 ஏப்ரல் 2006 (UTC)

விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையொன்றைத் தொடங்குவது எப்படி என்பது தொடர்பான பக்கத்தில் ஜெகசிற்பியன் பற்றிய கட்டுரையைக் கண்டதும் அதற்கான ஆட்சேபணையாகவே விக்கிப்பீடியாவின் நான்கு பக்கங்களில் கிரிதரனுக்கான மடலை இட்டிருந்தேன். அப்பக்கங்களில் இரண்டு முன்பிருந்த நிலைக்கு ஏற்கனவே மாற்றஞ் செய்யப்பட்டுள்ளன. ஏனைய இரு பக்கங்களிலிருந்தும் நானே அம்மடலை அகற்றிவிட்டேன். இது தொடர்பில் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். --கோபி 05:59, 21 ஏப்ரல் 2006 (UTC)கோபி


தங்கள் அவதானிப்புக்கு நன்றி. கிரிதரனுடன் அஞ்சல் தொடர்பில் இருக்கின்றேன். அவர் த.வி. பற்றி தற்சமயம்தான் அறிந்து வருகின்றார். அவருக்கு விக்கிபீடியா (ஆங்கிலம்) வழக்கத்தைப்பற்றி பின்வருமாறு விளக்கியிருந்தேன். "Giritharan, as you are an established writer, there should be an Article about you in Tamil Wikipedia that is separate from the User Info. Usually, it is not recommanded that a person edit his/her own bio. But, it is alright this time." நீங்கள் சொல்வது போல ஒருவரைப் பற்றிய விக்கிபீடியாவை அவரே தொகுப்பது பொருத்தமில்லைத்தான், ஆனால் அவரைப்பற்றி பயனர் பக்கத்தில் சில தகவல்களை தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கூறியதற்கிணங்கவே இத்தகவல்களை இட்டிருந்தார். நான் தான் இத்தகவல்கள் ஒரு கட்டுரைக்கே பொருத்தம் என்று புது கட்டுரை ஒன்றை உருவாக்கினேன். இக்கட்டுரையை Copy Edit செய்யம்படி என்னிடம் கேட்டிருந்தார். எனவே, இத்தகவல்களை மையமாக வைத்து நேரம் கிடைக்கும்பொழுது இக்கட்டுரையை நான் பின்னர் மேம்படுத்திவிடுகின்றேன். கவனத்துக்கு நன்றிகள்.


தனிப்பட்ட அஞ்சல்களை கட்டுரை பக்கத்தில் இடுவது தேவையற்றது. எனவே நீக்கி விடுகின்றேன். கோபி புரிந்துகொள்ளுவார் என நம்புகின்றேன். --Natkeeran 18:48, 20 ஏப்ரல் 2006 (UTC)

கிரிதரன் விவகாரம்[தொகு]

கோபி வேண்டுமென்றே ஒரு வகையான ஆட்சேபணையாக இதை செய்திருக்கக்கூடும்.

கிரிதரனுடைய நடவடிக்கைகள் எனக்கும் மிகுந்த எரிச்சலை ஊட்டியது.

விக்கிபீடியா பக்கங்களைக்கூட அழித்து அவர் ஒரு எழுத்தாளரின் கட்டுரையை போட்டிருக்கிறார். இது தவறுதலாக செய்யப்பட்டதென என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமென்றே செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. வ. அ. கந்த சாமி என்று ஒருவரையும் தன்னையும் இவர் செயலறிந்தே விளம்பரப்படுத்தி வருகிறார். நூலகம் விக்கியும் இவரது கந்தசாமி தாக்குதலுக்கு இலக்காகின்றது. அதிகம் சிரமப்பட தேவையில்லை, விக்கிபீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை அவருக்கு அறியப்படுத்துங்கள். "தகுதி" உடையவரானால் அதனை புரிந்துகொள்வார்.

--மு.மயூரன் 19:58, 20 ஏப்ரல் 2006 (UTC)

trimming needed[தொகு]

this article needs to be trimmed. life history should be still shorter. the page should not seem like a self profile written by the author himself or by his well wishers instead it should better follow neutral wiki style. this applies to persons living or dead in all fields. previously one such article பா.ராகவன் which looked like promotional article initially was trimmed. one can see its edit history.i think the first two lines of education section can be merged with life history and the rest of the lines merged with publications list. publication lists shall be given as a table instead of in sentences.

i feel following lines are unncessary : ""ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியை மீண்டும் இனங்காண்பதில் பதிவுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பதிவுகளில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல முக்கியமான படைப்பாளிகள் எழுதி வருகின்றார்கள். பலருக்குப் பதிவுகள் களம் அமைத்துக் கொடுத்துமிருக்கிறது. பதிவுகளைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பதிவுகள் இணைய இதழ் இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரால் ஆர்வமாக வாசிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பல படைப்பாளிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகளில் பங்குபற்றி வருவதும் குறிப்பிடத் தக்கது.""

decorative phrases like எழுத்துலகில் காலடி வைத்த could be avoided and let the fact be presented in simple words--ரவி 20:15, 20 ஏப்ரல் 2006 (UTC)


சில பதில்கள்[தொகு]

மயூரன், த.வி. நாம் நினைப்பது போன்று அவ்வளவு இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியது இல்லை. புதிய பக்கங்களை உருவாக்குவது எப்படி என்ற சுட்டியை அஞ்சல் செய்து இருந்தேன். அவர் அதற்குள் கட்டுரையை இட்டுருந்தார். அதை ஒரு பெரிய தவறாக நான் கணிக்கவில்லை. த.வி. நடையை புரிய சில வாசிப்புக்கள் அல்லது கட்டுரைகள் தேவைப்படும்.


மயூரநாதன், உங்கள் கருத்துடன் ஒத்துபோகின்றேன். உறிதியான முன்னுதாரணங்கள் நாம் பின்பற்ற வேண்டும். நான் மேலே விளக்கங்கங்கள் தந்துள்ளேன். த.வி. ஆங்கில விக்கிபீயாபோலின்றி தமிழ் சூழலுக்குகேற்ப சில தனித்துவமான பாதைகளையும் அமைக்கவேண்டியிருக்கும்.


ரவி கூறியபடி, கட்டுரையை சீரமைக்க வேண்டும். செய்யலாம் ;-)


த.வி தொகுக்க பழகுவது நாம் நினைப்பதைக் காட்டிலும் கடினாமாக சிலர் உணர்கின்றார்கள். ஞானவெட்டியான் ஐயா தனக்கு புரிய சிரமாக இருப்பதாக எனக்கு கூறினார். அவருக்கு மேலும் விளக்கங்கள் அஞ்சல் செய்து இருக்கின்றேன். எமக்கு பழகிவிட்டதால் இக்கருத்தை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கவில்லையோ என்று தோன்றுகின்றது.--Natkeeran 03:06, 21 ஏப்ரல் 2006 (UTC)

ya, its true that beginners to internet and wiki concept will find it difficult to write articles here. Even in en wiki with so many help pages it takes some time and patience to understand how things work. We cannot feel bad that users enter their articles at wrong namespaces but it only underlines the need to improve our help pages contents and clarity. Contribution to the help pages has been relatively less in the last few months. Hope, atleast some admins would try to improve some help pages as much and as soon as possible--ரவி 13:50, 21 ஏப்ரல் 2006 (UTC)

Rewrite in Progress[தொகு]

பிரதான ஆக்கர் அல்லது ஆக்கத்தை சமர்த்தவர், கீழ் கண்ட திருத்தக்கு ஆட்சோபனை இல்லை என்பதை அஞ்சல் மூலம் உறிதிசெய்துள்ளேன். எனவே, பிற பயனர்கள் ஆட்சோபனை தெரிவிக்கா இடத்து 4 தினங்களில் (மொத்தமாக ஒரு கிழமை) இவ் திருத்தத்தை தற்போதுள்ள கட்டுரைக்கு பதிலாக மாற்றிவிடுவேன். --Natkeeran 17:24, 24 ஏப்ரல் 2006 (UTC)

நற்கீரன், கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். தினமணி என்ற பத்திரிகை ஈழத்திலிருந்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஈழமணி என்ற தினசரிப் பத்திரிகை சிலகாலம் கொழும்பிலிருந்து 70பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்தது. கட்டுரையின் மூலத்தில் ஈழமணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அனுமானித்தது தவறென்றால் திருத்தி விடவும்.--Kanags 00:30, 25 ஏப்ரல் 2006 (UTC)
நீங்கள் சரிதான். அது எனது கவனக்குறைவே. திருத்தங்களுக்கு நன்றி. --Natkeeran 03:56, 25 ஏப்ரல் 2006 (UTC)

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன், முழுபெயர் நவரத்தினம் கிரிதரன் (வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர், பல்துறை வல்லுனர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பல காலமாக தொடர்ந்து வெளிவரும் இணைய இதழ் பதிவுகளின் ஆசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வ.ந.கிரிதரன் அவர்கள் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர், வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்றார். தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியிலும், மொறட்டுவாப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். அங்கு கட்டிடக்கலையில் இளமாணி பட்டம் பெற்றார். தற்பொழுது கனடாவில் வசிக்கும் இவர், இங்கு மேலும் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் தகமைகள் பெற்றுள்ளார்.

எழுத்துலக வாழ்வு[தொகு]

மிக இளவயதிலேயே எழுத தொடங்கிய வ.ந.கிரிதரன், பல சிறுவர் கால படைப்புக்களை படைத்துள்ளார். இவரின் படைப்புக்கள் ஈழநாடு 'சிறுவர் மலர்', சுதந்திரன், கண்மணி, சிரித்திரன், வீரகேசரி, ஈழமணி போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது 17 வயதில் படைக்கப்பட்ட 'சலனங்கள்' சிறுகதை சிரித்திரன் நடாத்திய அ.ந.க சிறுகதைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டது. அதன்பின் இவரது சிறுகதைகள், மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு', 'வரலாற்றுச் சின்னங்கள் பேணப்படுதல்', 'கோப்பாய்க் கோட்டை' பற்றிய கட்டுரைகள் முறையே ஈழநாடு மற்றும் வீரகேசரியில் வெளிவந்திருக்கின்றன. மொறட்டுவைத் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' மலரின் ஆசிரியராகவும் இவர் இருந்திருக்கின்றார். கனடாவிற்கு புலம் புகுந்த பின்பு இவரின் பல படைப்புக்கள் இங்குள்ள சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. மேலும் ரொறன்ரோவில் 'இரவி (வார பத்திரிகை)', 'கல்வி (வார பத்திரிகை)' , குரல் (கையெழுத்டு பிரதி), 'நமது பூமி (செய்தி கடிதம்)', 'கணினி உலகம் (செய்தி கடிதம்)' ஆகிய பல ஆரம்ப கால தமிழ் படைப்பு முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். இவை சில இதழ்களோடு நின்றுவிட்டன. எனினும் 2000 ஆண்டு இவர் ஆரம்பித்த பதிவுகள் இணைய இதழ் தொடர்ந்து வெளிவருகின்றது. மேலும், இவரது நூல்கள், படைப்புக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. விபரங்களுக்கு பட்டியலை பார்கவும்.

படைப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

  • அமெரிக்கா
  • நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு
  • மண்ணின் குரல்
  • எழுக அதிமாநுடா

வெளி இணைப்புகள்[தொகு]

இணையத்தில் வ.ந.கிரிதரனின் படைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வ._ந._கிரிதரன்&oldid=183300" இலிருந்து மீள்விக்கப்பட்டது