E=mc²
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியலில், (நிறை)திணிவு-ஆற்றல் சமன்பாடு (mass–energy equivalence) என்பது பொருளொன்றின் நிறை (அ) திணிவு அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் சமன்பாடு ஆகும். சிறப்புச் சார்புக் கோட்பாட்டில் இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
இங்கு
-
- E = ஆற்றல்,
- m = நிறை (அ) திணிவு,
- c = வெற்றிடத்தில் ஒளியின் வேகம்
இச்சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இல் வெளியிட்டார்[1].
இச்சமன்பாடு ஒரு குறித்த அலகுத் திட்டத்தில் தங்கியிருக்கவில்லை. அனைத்துலக முறை அலகுகளில், ஆற்றலின் அலகு ஜூல், திணிவின் அலகு கிலோகிராம், வேகத்தின் அலகு மீட்டர்/வினாடி.
1 ஜூல், 1 கிகி·மீ2/வி2 என்பதற்குச் சமனாகும்.
E (ஜூல்) = m (கிலோகிராம்) x (299,792,458 மீ/வி)2.
[தொகு] விளக்கம்
எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டைனின் ஆற்றல்-திணிவு சமன்பாடு தெரிவிக்கிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Einstein, A. (1905), "Ist die Trägheit eines Körpers von seinem Energieinhalt abhängig?", Annalen der Physik 18: 639–643, doi:, http://www.physik.uni-augsburg.de/annalen/history/papers/1905_18_639-641.pdf. See also the English translation.
[தொகு] வெளி இணைப்புகள்
