ஹியூஜென்ஸ் விண்ணுளவி
| ஹியூஜென்ஸ் விண்ணுளவி Huygens probe |
|
|---|---|
| அமைப்பு: | ஈசா/இசா/நாசா |
| முதன்மை ஒப்பந்தக்காரர்: | Aerospatiale |
| திட்ட வகை: | உளவி |
| எதனது துணைக்கோள்: | சனி |
| ஏவப்பட்ட நாள்: | டிசம்பர் 25, 2004 |
| ஏவுகலம்: | காசினி விண்கலம் |
| தே.வி.அ.த.மை எண்: | 1997-061C |
| இணைய பக்கம்: | ஹியூஜென் இணையத்தளம் |
| நிறை: | 319 கிகி |
| edit | |
ஹியூஜென்ஸ் விண்ணுளவி (Huygens probe), சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி ஆணையகத்தினால் விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு விண்ணுளவி ஆகும். இவ்வுளவிக்கு டச்சு அறிவியலாளர் கிரிஸ்டியன் ஹியூஜென்சின் (1629-1695) நினைவாக ஹியூஜென்ஸ் எனப் பெயரிடப்பட்டது. காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் கூட்டாக பூமியில் இருந்து அக்டோபர் 15, 1997 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. ஹியூஜென்ஸ், காசினி என்ற தாய்க்கப்பலில் இருந்து டிசம்பர் 25, 2004 இல் பிரிந்தது. இது பின்னர் 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டாவின் வளி மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் வேகத்தில் டைட்டானில் ஜனவரி 14, 2005 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டான் துணைக்கோளில் தரையிறங்கிய முதல் உளவியாகும். இவ்விண்ணுளவி டைட்டானில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
[தொகு] அமைப்பு
9 அடி விட்டமும் 318 கிலோகிராம் எடையும் கொண்டது ஹியூஜென்ஸ் உளவி. ஆறு உளவிக் கருவிகளைக் கொண்டது. டைட்டான் உளவியின் கருவிகளை இயக்கும் மின்கலங்கள் 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. 20 நாட்கள் டைட்டான் உளவி சூழ்மண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலங்கள் இயக்கத்தில் இருந்து, அதன் தன்னியக்கிக் கருவிகள் வாயுவின் அழுத்தம், வெப்பநிலை, திணிவு ஆகியவற்றைப் பதிவு செய்து தாய்க்கப்பல் காஸ்சினி மூலமாகப் பூமிக்குத் அனுப்பியது[1].
ஹியூஜென்ஸ் முதலில் அனுப்பிய படங்களில் இருந்து அது எண்ணெய்க்கடல் கரை எல்லையில் (Oily Ocean Shoreline) இறங்கியதாக அவதானிக்கப்பட்டது.