வெள்ளை மூக்குக்கொம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
White Rhinoceros[1]
White rhinoceros in Kruger Park
White rhinoceros in Kruger Park
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Animalia
தொகுதி: Chordata
வகுப்பு Mammalia
வரிசை: Perissodactyla
குடும்பம்: Rhinocerotidae
பேரினம்: Ceratotherium
இனம்: C. simum
இருசொற்பெயர்
Ceratotherium simum
(Burchell, 1817)
The White Rhinoceros original range (orange: Northern (C. s. cottoni), green: Southern (C. s. simum)).
The White Rhinoceros original range (orange: Northern (C. s. cottoni), green: Southern (C. s. simum)).
Subspecies

Ceratotherium simum simum
Ceratotherium simum cottoni

இப்படத்தில் உள்ளது வெள்ளை மூக்குக்கொம்பன். உண்மையில் இது சாம்பல் நிறமுடையது. ஆப்பிரிக்கான மொழியில் பரந்த அல்லது விரிந்த என்னும் பொருள் படும் wyd ன்னும் சொல்லைத் தவறுதலாக white (வெள்ளை) என்று உணர்ந்ததால் ஏற்பட்ட குழப்த்தால் வெள்ளை மூக்குக்கொம்பன் என்று அழைக்க நேர்ந்தது. கறுப்பு மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் சற்று குவிந்து இருக்கும். "வெள்ளை" மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் அகலமாக இருக்கும்.இரண்டாவது மூக்குக்கொம்பு குட்டையாக இருப்பதையும் படத்தில் காணலாம்

யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை மூக்குக்கொம்பனும், இந்திய காண்டாமிருகமும், நீர்யானையும் உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள். வெள்ளை மூக்குக்கொம்பனில் இரண்டு உள் இனங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum simum) வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. மிக இக்கட்டான அளவு அருகிவிட்ட வட வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum cottoni) இன்று (சூன் 2008) மொத்தம் நான்குதான் உலகில் உள்ளன.[3]

வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.[4]. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14100050. 
  2. IUCN SSC African Rhino Specialist Group (2008). Ceratotherium simum. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 20 October 2008.
  3. Times Online | News | Environment | Poachers kill last four wild northern white rhinos
  4. "African Rhinoceros". Safari Now. பார்க்கப்பட்ட நாள் 2008-03-19.

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்