கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புக்கள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கிமீ தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் 29°16′0″N 110°22′0″E / 29.26667, 110.36667அமைவு: 29°16′0″N 110°22′0″E / 29.26667, 110.36667 மற்றும் 29°24′0″N 110°41′0″E / 29.4, 110.68333 ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]