வி. கார்த்திகேய பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கார்த்திகேய பாண்டியன்
மாநில அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2023
முதலமைச்சர்நவீன் பட்நாயக்
துணை ஆட்சியர்-களஹாண்டி மாவட்டம்
பதவியில்
2002–2005
ஆட்சியர்-கஞ்சாம் மாவட்டம்
பதவியில்
2007–2011
முதலமைச்சரின் தனிச்செயலர்-ஒடிசா
பதவியில்
2011 – அக்டோபர் 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1974
மதுரை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
துணைவர்(s)சுஜாதா, இஆப

வி. கார்த்திகேய பாண்டியன் (V. K. Pandian) இந்திய ஆட்சிப் பணி மேனாள் அதிகாரியும் தற்போதைய ஒடிசா மாநிலத்தின் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி (Transformational Initiatives) திட்ட அமைச்சரும் ஆவார்.[1][2]

இளமைக் காலம்[தொகு]

1974 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார். மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலையும் தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலையும் படித்தார்.[3] தமிழ்நாட்டில் பிறந்த வி. கா. பாண்டியன் ஒடிசாவினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுஜாதா என்பவரை மணந்தார்.[4]

இந்திய ஆட்சிப்பணி[தொகு]

வி. கா. பாண்டியன் தமிழ்நாட்டினைச் சேர்ந்த 2000ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி ஆவார். இவர் ஒடிசா ஆட்சிப் பணி அதிகாரியாக 2002ஆம் ஆண்டில் களஹாண்டி மாவட்டத்தில் தரம்கார்க்கில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2005ஆம் ஆண்டில், மயூர்பஞ்சு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இங்கு இவரது பணி போராளி குழுக்களின் பரவலைக் குறைக்க நிர்வாகம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார். 2007-ல் பாண்டியன் கஞ்சாம் மாவட்ட ஆட்சியராக பணி மாறுதல் பெற்றார். இப்பணிகளில் பாண்டியன் திறமையாகச் செயல்பட்டதன் காரணமாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக 2011 முதல் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் கூடுதல் பொறுப்புகள் பாண்டியனுக்கு வழங்கப்பட்டன.[5]

மாநில அமைச்சராக[தொகு]

பாண்டியன் அரசுப் பதவியிலிருந்து அரசியலில் சேரலாம் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில் தனது அரசுப் பதவியிலிருந்து 23 அக்டோபர் 2023 அன்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.[6]இந்நிலையில் ஒடிசா மாநில மாற்றத்திற்கான முயற்சிகள் நவீன ஒடிசா திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[7]

விருதுகள்[தொகு]

பாண்டியன் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து பல விருதுகள் பெற்றுள்ளார். அவை:

  • பொதுப்பணித் துறையின் மறுவாழ்வுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் தேசிய விருது.
  • 'ஹெலன் கெல்லர் விருது'
  • கஞ்சாம் மாவட்ட ஆட்சியராக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றியதற்கான தேசிய விருது, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினை செயல்படுத்தி நாட்டின் சிறந்த மாவட்டமாகக் கஞ்சாம் மாவட்டத்திற்கான தேசிய விருது இரண்டு முறை - இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]