விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு32

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விக்கிமீடியாப் பிரிவு[தொகு]

விக்கிமீடியாவின் இந்தியப்பிரிவைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைக் கடந்த ஆண்டில் செய்து கொண்டிருந்தோம். இப்போது உடன்படிக்கையை எழுதி முடித்து கருத்து வேண்டி இங்கு வெளியிட்டுள்ளார்கள். உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:49, 10 மார்ச் 2010 (UTC)

பார்த்தேன், சுந்தர், விதிகளையும் விரைந்து படித்தேன். கருத்துகளைப் பதிவு செய்கிறேன். உறுப்பினனும் ஆகலாம் என எண்ணியுள்ளேன். வாக்களிக்க முடியும் அல்லவா?--செல்வா 04:20, 10 மார்ச் 2010 (UTC)
கட்டாயம் செய்யுங்கள். வாக்களிக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 04:38, 10 மார்ச் 2010 (UTC)

நகர்பேசி இடைமுகம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவுக்கான நகர்பேசி இடைமுகத்தை மொழிபெயர்த்துள்ளேன். இங்கு சென்று சரி பாருங்கள். அளிப்புரிமைச் செய்தியை இன்னமும் மொழிபெயர்க்கவில்லை. வெறும் 25 செய்திகளே என்பதால் உடனடியாக மெய்ப்பார்த்து தேவையான மாற்றங்களைச் செய்தால் நகர்பேசிகளில் தமிழ் விக்கிப்பீடியா வலம் வரும். :) -- சுந்தர் \பேச்சு 08:01, 10 மார்ச் 2010 (UTC)

இது தொடர்பான மின்னஞ்சல் உரையாடல் (http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2010-March/000467.html) அடுத்த கட்ட நடவடிக்கைகளை விவரிக்கிறது. செல்பேசிகளில் தமிழ் விக்கிப்பீடியாவைப் படிக்கும் வசதி வரும் ஆண்டுகளில் முக்கியமானது எனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:33, 10 மார்ச் 2010 (UTC)

முதல் பக்கத்தில் போட்டிக்கான தொடுப்பு ஏற்படுத்தி வைத்தல்[தொகு]

முதல் பக்கத்தில் போட்டிக்கான தொடுப்பு ஏற்படுத்தி வைத்தல் தேவை அல்லவா? ஏற்கனவே உள்ளதா? யாரேனும் இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது நல்லது. அறிவிப்பு வந்தபின் உடனே செய்யும் படி இருக்க வேண்டுமல்லவா?--செல்வா 04:16, 15 மார்ச் 2010 (UTC)

மீடியாவிக்கி பேச்சு:Sitenotice - என்ற பக்கத்தில் செய்தியை இட்டு வைப்போமா? அறிவிப்பு வந்தவுடன், அதன் இணைப் பக்கத்தில் இட்டுவிடலாம். செய்தி எப்படி இருக்க வேண்டும், வலைவாசலுக்கு இணைப்பு தரலாமா? -- சுந்தர் \பேச்சு 06:13, 15 மார்ச் 2010 (UTC)
தினமணியில் வெளியான தமிழ் விக்கிப்பீடியா போட்டி செய்தியின்படி போட்டிகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றன.--Kanags \உரையாடு 08:37, 15 மார்ச் 2010 (UTC)

கட்டுரைகளைப் பதிவேற்றும் தளம் இன்னும் உருவாகவில்லை. இதில் அரசு துறையினர் ஈடுபட்டுள்ளார்கள். போட்டிக்கான விளம்பர அறிவிப்பு வெளியாகவும் ஓரிரு நாட்கள் ஆகலாம். இதற்குப் பின் முதற்பக்க அறிவிப்பு, மேற்பகுதி அறிவிப்பு இடுவது நல்லது. எந்நேரமும் இதனைச் செயற்படுத்தும் அளவு பின்னணியில் தேவையான வேலைகளைச் செய்ய வேண்டும். நன்றி--ரவி 19:37, 15 மார்ச் 2010 (UTC)

எனக்கு முதற்பக்கத்தை திறக்கும்போது போட்டிக்கான அறிவித்தல் எதுவும் தற்போது தெரியவில்லை. அப்படித்தான் உள்ளதா, அல்லது எனக்குத்தான் அது தெரியவில்லையா? :(--கலை 22:59, 2 ஏப்ரல் 2010 (UTC)
நீங்கள் sitenoticeஐ மறைத்து இருந்தால் நீங்கள் புகுதைகை செய்யும் போது sitenotice தெரியாமல் போயிருக்கலாம். மறைத்ததை மீள்விக்க முடியுமோ தெரியவில்லை. போட்டி அறிவிப்பை sitenotice உடன் முதற்பக்கத்தில் வேறு ஒரு இடத்தில் படிமம் எதுவும் இல்லாமல் இணைப்புக் கொடுக்க வேண்டும்.--Kanags \உரையாடு 23:12, 2 ஏப்ரல் 2010 (UTC)

Please provide input for the strategic planning process![தொகு]

This message is posted by Philippe, on behalf of Tyler, from the Bridgespan Group:
English text: My name is TylerT, and I am a member of the team from the Bridgespan Group that has been working with the Wikimedia Foundation throughout its strategic planning process. As you may have heard, as part of this process the Foundation has decided to experiment with making short-term investments to put staff on the ground and help grow readership and participation across the Wikimedia projects and languages in a few high-priority places. The idea of this pilot program is to determine what works, and what doesn't, and document those findings. India is one of the places that is being considered, and we would appreciate any help in understanding the following:

  1. What has the Indian Wikimedia Community done in the past year to increase readership and participation?
  2. What plans do the Indian Wikimedia Community have to continue to work on increasing readership and participation?
  3. What are the greatest challenges the Indian Wikimedia Community faces in increasing readership and participation?
  4. How could the Foundation help?
  5. If the Foundation were to put staff on the ground in India, where would it make the most sense for them to be located?
  6. Is there anything else the Foundation should consider when deciding whether or not to put staff on the ground in India?

You can leave comments for me here, or on my talk page on the strategy wiki, or by emailing strategy@wikimedia.org.

Thanks in advance for your help! Tyler

PS - please translate and distribute this message to anyone who may be interested!


மேற்கண்ட செய்தியின் தமிழாக்கம்: Tamil translation by --மணியன் 04:59, 19 மார்ச் 2010 (UTC)

தொலைநோக்கு திட்டமிடல் செயற்பாட்டிற்கு கருத்துக்கள் தெரிவித்து உதவுங்கள்!

இந்த செய்தியை டைலர் சார்பாக பிரிட்ஜ்ஸ்பான் குழுவின் Philippe பதிந்துள்ளார்:

தமிழ் உரை:

எனது பெயர் TylerT. நான் பிரிட்ஜ்ஸ்பான் குழுவில் விக்கிமீடியா நிறுவனத்துடன் தொலைநோக்கு திட்டமிடல் செயலபாட்டில் தொடர்ந்து பணியாற்றிவரும் அணியின் உறுப்பினர்.நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இந்த செயல்பாட்டின் பங்காக விக்கிமீடியா நிறுவனம் விக்கிமீடியாவின் அனைத்து திட்டங்களிலும் மொழிகளிலும் சில உயர்நிலை முன்னுரிமை இடங்களில் படிப்பவர் மற்றும் பங்களிப்பவர் எண்ணிக்கையைக் கூட்டிடும் வகையில் களத்தில் பணியாளர்களை வேலைக்கு எடுக்க குறைந்த கால நிதித்திட்டம் மூலம் சோதனைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.இந்த வெள்ளோட்டத் திட்டத்தின் நோக்கம் எவை வேலை செய்கின்றன, எவை வேலை செய்வதில்லை என அறிந்து அவற்றை ஆவணப்படுத்துதல் ஆகும். இந்தியா முன்னுரிமை இடங்களில் ஒன்றாகும், கீழ்கண்டவற்றை குறித்த புரிதலுக்கு உதவி புரிந்தால் நாங்கள் மகிழ்வோம்:

  1. இந்திய விக்கிமீடியா சமூகம் படிப்பவர் மற்றும் பங்களிப்பவர் எண்ணிக்கையைக் கூட்டிட கடந்த ஆண்டு என்னென்ன செய்தன?
  2. இந்திய விக்கிமீடியா சமூகம் படிப்பவர் மற்றும் பங்களிப்பவர் எண்ணிக்கையைத் தொடர்ந்து கூட்டிட என்னென்ன திட்டங்கள் கொண்டுள்ளன?
  3. இந்திய விக்கிமீடியா சமூகம் படிப்பவர் மற்றும் பங்களிப்பவர் எண்ணிக்கையைக் கூட்டிட எதிர்கொள்ளும் இடர்கள் என்ன?
  4. நிறுவனம் எந்த வகையில் உதவிடலாம்?
  5. நிறுவனம் களத்தில் பணியாளர்களை அமர்த்திட முடிவு செய்தால், அவர்களின் பணியிடமாக அமைய எந்த இடம் மிகச் சரியானது?
  6. இந்தியாவில் களத்தில் பணியாட்களை அமர்த்தலாமா அல்லவா என்று முடிவு செய்ய நிறுவனம் வேறேதும் காரணிகளைக் கருதிட வேண்டுமா?

உங்கள் கருத்துக்களை எனக்காக இங்கு இடலாம் , அல்லது எனதுப் பேச்சுப் பக்கம் on the strategy wiki இடலாம், அல்லது இம்முகவரிக்கு strategy@wikimedia.org மின்னஞ்சல் செய்யலாம்.

உங்கள் உதவிகளுக்கு முன்கூட்டியே நன்றி! Tyler

பி.கு - மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழைகள்/தவறுகள் இருப்பின் பிற விக்கிப்பக்கங்களைப் போன்றே இதனையும் தொகுக்கலாம். விரும்பும் அனைவரின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்வீராக!

The Future of Punjabi[தொகு]

The Future of Punjabi

Encyclopedia on Astronomy in Malayalam;a voyage through the wonders of Universe[தொகு]

Encyclopedia on Astronomy in Malayalam;a voyage through the wonders of Universe

Singapore-area contributors? 2010 Youth Summer Olympics[தொகு]

Hello: If you are in the Singapore area, I am hoping to get some people accredited as reporters, for the 2010 Summer Youth Olympics. Visit Wikinews' project area to submit your name, and be considered for our official bid. -- Zanimum 14:53, 22 மார்ச் 2010 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பு நெறிப்படுத்தல்[தொகு]

கூகுளுடன் தொடர்ந்து மடலாடி வந்தபின்னர் இன்னும் இரண்டு நாட்களில் (வியாழன் இந்திய நேரம் 17:00) வலைத்தொடர்புப் பட்டறை ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரவியும் நானும் கூகுள் தொடர்பாளரிடம் நமது விக்கி நடை பற்றி விளக்க உள்ளோம். அதற்கு முன்னதாக அவர்கள் மொழிபெயர்த்த ஏதாவது ஒரு கட்டுரையைத் தேர்வு செய்து முழுமையாக விக்கிப்படுத்திக் காட்டினால், அவர்களுக்கு விளக்க ஏதுவாகும். இதுவரை கட்டுரை தேர்வுக்குழுவில் உடனுக்குடன் உதவிய கார்த்தி, கலை, குறும்பன், அராப்பத் ஆகியோருக்கு மிக்க நன்றி. நடைப்பிறழ்வுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஏற்படுத்தியபின் அந்தப் பணியைத் தொடர்வோம். -- சுந்தர் \பேச்சு 14:12, 23 மார்ச் 2010 (UTC)

இன்று மாலை 5-6.30 வரை கூகுள் பணியாளர்களுடனான தொலைப்பேசி வழி உரையாடலில் கலந்து கொண்டோம். உரையாடல் தலைப்புகளை இங்கு காணலாம். ஓரளவு சுமுகமாகவே சென்றது. மேல் விவரங்களை விரிவாக ஓரிரு நாளில் பகிர்ந்து கொள்கிறோம். நன்றி--ரவி 15:07, 25 மார்ச் 2010 (UTC)
உரையாடலை அடுத்து எழுந்த புரிந்துணர்வு:
  1. பக்கங்களில் சிகப்பு இணைப்புகள் சேர்க்காமல் இருக்க மொழிபெயர்ப்பு மென்பொருளில் மாற்றம் செய்ய இயலுமா என்று பார்க்க உறுதி அளித்துள்ளார்கள்.
  2. பேச்சுப் பக்க உரையாடல்களைக் கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு மொழிபெயர்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.
  3. திறம் குறைந்த மொழிபெயர்ப்பாளர்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பில் இருந்து விலக்கப்படுவார்கள். தமிழ் மொழி கற்ற கூகுளின் முழு நேரப் பணியாளர் ஒருவர் இப்பொறுப்பில் உள்ளார்.
  4. நமது ஒப்புதலைப் பெற்ற மொழிபெயர்க்கப்படும் கட்டுரைத் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள். வேண்டிய கட்டுரைகள் என்று நமது பரிந்துரைகளையும் அளிக்கலாம். இதன் மூலம் ஏற்கனகவே உள்ள கட்டுரைகளை நீக்கி எழுதுவது தவிர்க்கப்படும்.
  5. மொழிபெயர்ப்பாளர்களுக்கான நடைக் கையேட்டை நாம் அளித்தால் அதனைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள்.
  6. ஏற்கனவே பதிவேற்றிய கட்டுரைகளில் மீண்டும் அவர்கள் செப்பம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்தடுத்த கட்டுரைகள் சீராக எழுதப்படவே வாய்ப்பு உள்ளது.
  7. பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்துக்கு நேரடியாக ஒரு சந்திப்புக்குச் சென்று மேலும் புரிந்துணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்கள். தகுந்த நேரத்தில் சுந்தர் கலந்து கொள்ளலாம்.

ஆக மொத்தம் - 50% - 50% என்ற அளவில் ஓரளவு நம்பிக்கை அளிக்கும் உரையாடலாக இதனைக் கருதலாம். நாம் விரும்பும் அளவு முழுக் கட்டுப்பாடும், தரமும் கிடைக்காமல் போகலாம். அதே வேளை, இப்போது உள்ளதோடு நிலைமை மேம்படவும் வாய்ப்பு உண்டு. மிகப் பெரிய அளவில் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்கான திட்டம் உள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது. உறுதியான தகவல்களைப் பெற இயலவில்லை. அவர்கள் செயற்பாட்டில் மாற்றம் காண ஒன்றிரண்டு மாதம் ஆகலாம். அதனைப் பொறுத்து இத்திட்டத்தை ஏற்பதா வேண்டாமா, எப்படித் தொடர்வது என்று அடுத்த கட்ட உரையாடல், மீளாய்வு செய்யலாம்.--ரவி 12:18, 26 மார்ச் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி விளம்பர அறிவிப்பு ஒட்டிகள்[தொகு]

ஓரிரு நாளில் கட்டுரைப் போட்டிக்கான விளம்பர அறிவிப்பு ஒட்டிகள் வெளியாகலாம். யாருக்கேனும் தங்கள் பணியிடம் / கல்லூரி முதலிய இடங்களில் இதனை வெளியிட்டு விளம்பரப்படுத்த விருப்பம் என்றால் தேவைப்படும் ஒட்டிகள் எண்ணிக்கை, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு ravidreams at gmail dot com என்ற முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பது சிரமம் :( ஒட்டிக்கான படிமம் வெளிவந்த பின் அதனைத் தாங்களே அச்சிட்டு எடுத்துக் கொள்வது உகந்ததாக இருக்கும். நன்றி--ரவி 05:33, 24 மார்ச் 2010 (UTC)

விக்கிமீடியாவுக்கு நன்றி[தொகு]

தனிப்பெரும் மதிப்பிற்குரிய விக்கிபீடியா நிறுவனத்தாருக்கு அன்பு வணக்கம்!

அண்மையில்தான் தமிழ் விக்கிபீடியாவில் நுழைந்தேன். எத்தனை கட்டுரைகள்! எவ்வளவு ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகள்! தமிழில் இதுவரை நூலாக வெளிவராத பல தகவல்கள் கூட இங்கே காணக் கிடைக்கின்றன. மலைப்பாக இருக்கிறது!

இந்தப் பதிவுகளெல்லாம் தமிழர்களால் எழுதப்பட்டவைதாம் என்றாலும் எழுதக் களம் அமைத்துக் கொடுத்தவர் தாங்கள்தாமே! இதுவரை எவ்வகையிலும் பதிவு செய்யப்படாத, தமிழ் பற்றிய இத்தகைய கட்டுரைகள், இன்று உலகில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன எனில் அதற்குக் காரணம் தாங்கள் எங்களுக்கென அமைத்துக் கொடுத்திருக்கும் இந்தத் தமிழ் விக்கிபீடியாதானே! ஆங்கிலேயர்களான தாங்கள் எங்கள் மொழி மீது இவ்வளவு அக்கறை கொண்டு, தமிழுக்கென இவ்வளவு பெரிய ஒரு பன்னாட்டுக் களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களே அதற்குத் தமிழ் உலகத்தின் சார்பில், தமிழன் எனும் முறையில் என் உயிரார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனச் சொல்வதைத் தவிர வேறெப்படி நன்றி செலுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.

உயிரார்ந்த நன்றிகள்!! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன்\உரையாடு 2:10PM, 26 மார்ச் 2010.


வணக்கம் ஞானப்பிரகாசன், உங்கள் செய்தி கண்டு மகிழ்ச்சி. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கட்டற்ற அறிவு என்பதே குறிக்கோள். அதற்கு எல்லா மொழிகளிலும் இயங்குவது அவசியம். கிட்டத்தட்ட 260+ மொழிகளில் விக்கிமீடியா திட்டங்கள் இயங்கி வருகின்றன. நீங்களும் உங்களாலான உதவிகளைச் செய்யுங்கள். நன்றி--ரவி 12:10, 26 மார்ச் 2010 (UTC)

Wikimania Scholarships[தொகு]

The call for applications for Wikimania Scholarships to attend Wikimania 2010 in Gdansk, Poland (July 9-11) is now open. The Wikimedia Foundation offers Scholarships to pay for selected individuals' round trip travel, accommodations, and registration at the conference. To apply, visit the Wikimania 2010 scholarships information page, click the secure link available there, and fill out the form to apply. For additional information, please visit the Scholarships information and FAQ pages:

Yours very truly, Cary Bass
Volunteer Coordinator
Wikimedia Foundation

கட்டுரைப் போட்டி அறிவிப்பு[தொகு]

  • இன்றைய தினமணி இதழில் கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகவல் கீழ்காணும் தினமணி நாளிதழின் இணையப் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி செய்தி

--Theni.M.Subramani 01:20, 26 மார்ச் 2010 (UTC)

  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டிக்கான முதற்பக்கத் தொடுப்பு மற்றும் வலைவாசல்: கட்டுரைப் போட்டிப் பக்கங்களில் நிறைவு பெறாமலிருக்கும் செய்திகளை முழுமைப்படுத்தி வைக்கலாம். செய்தியைப் பார்த்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரும் மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் இருந்தால் நல்லது. --Theni.M.Subramani 03:41, 26 மார்ச் 2010 (UTC)
    • தொடர்புடைய பக்கங்களில் எவரேனும் நாசவேலையினர் வெறுக்கத்தக்க செய்திகளையோ படங்களையோ இட்டுவிடுவதைத் தவிர்க்கும் வண்ணம் காப்புச்செய்யப்பட்டுள்ளது. நம் பயனர்களில் அணுக்கம் கிடைக்காதவர்கள் அருள் கூர்ந்து பேச்சுப் பக்கத்தில் தங்கள் மாற்றங்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:16, 26 மார்ச் 2010 (UTC)

தமிழ் விக்கி மடற்குழுமம்[தொகு]

தமிழ் விக்கி மடற்குழுமத்தில் அனைவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். விக்கியில் இட்டு உரையாடுவதை விட மடற்குழுவில் உரையாட உகந்த விசயங்களை இங்கு பேசலாம். நன்றி--ரவி 12:08, 26 மார்ச் 2010 (UTC)

ஆங்கிலத்திலும் பதிவேற்றலாம்[தொகு]

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் அதனுடன் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி குறித்த தகவல்களை ஆங்கில மொழியிலான விக்கிப்பீடியாவில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு பக்கங்கள் உருவாக்கி அங்கிருந்து வலைவாசல்: கட்டுரைப் போட்டிப் பக்கத்திற்கு வருவது போல் இணைப்பு கொடுக்கலாம்.--Theni.M.Subramani 02:27, 27 மார்ச் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி வலைவாசலுக்கான இணைப்பு[தொகு]

எல்லாப் பக்கங்களிலும் வரும் இந்த இணைப்பை இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரியும் படி செய்யலாமா? இந்த இணைப்பை எவ்வாறு செய்வது? மயூரநாதன் 08:59, 27 மார்ச் 2010 (UTC)

ஆம், இன்னும் தெளிவாக ஒரு பெட்டி போல் செய்ய வேண்டும். mediawiki:sitenotice பக்கத்தில் செய்ய வேண்டும்--ரவி 10:21, 28 மார்ச் 2010 (UTC)
sitenoticeல் பெரிய பெட்டி அளவு அறிவிப்பு இட்டிருப்பதால் முதற்பக்க அறிவிப்பை நீக்கி இருக்கிறேன். எனினும் புகுபதிந்த உறுப்பினர்கள் sitenoticeஐ மறைத்து இருந்தால் அவர்களுக்கு போட்டி அறிவிப்பு தெரியாமல் போகலாம். முதற்பக்கத்தில் வேறு எப்படி அறிவிக்கலாம்--ரவி 10:37, 28 மார்ச் 2010 (UTC)
ரவி, முதற்பக்கத்தில் இணைப்பு எதையுமே காணவில்லையே! மயூரநாதன் 15:05, 28 மார்ச் 2010 (UTC)
sitenotice இல் இடுவதற்குப் பதிலாக முன்னர் செய்ததுபோல் பக்கத்திலேயே இடலாம். ஆனால் உரிய பக்கத்துக்குச் செல்வதற்குப் படிமத்தின்மீது சொடுக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் புரியுமா என்பது தெரியவில்லை. மயூரநாதன் 15:48, 28 மார்ச் 2010 (UTC)
முதற்பக்கத்தில் இவ்வளவு பெரிதாக போட்டி அறிவிப்பை இடுவது உசிதமாகத் தெரியவில்லை. விக்கிப்பீடியா முதற்பக்கத்துக்கு அது உலக இணைய மாநாட்டில் வலைத்தளம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. சிறிதாகப் போடுவது தான் நல்லது. தற்காலிகமாக முதற்பக்கக் கட்டுரை பகுதியையோ அல்லது செய்திகளையோ சற்றுக் கீழே நகர்த்திவிட்டு இந்த அறிவிப்பை அரைப்பங்கு அளவில் இடுவதுதான் நல்லது போல் எனக்குப் படுகிறது.மயூரநாதன் 16:06, 28 மார்ச் 2010 (UTC)